பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வம்மையார்க்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழயையிலும் பொன் பாவாடை சாத்தப்படுகிறது. அக் காட்சி யினக் கண்டு களித்தல் நாம் மக்கள் பிறவி எடுத்த தன் பயன் ஆகும்.

இத்தலத்து இறைவர் காளத்தி நாதேஸ்வரர், குடுமித் தேவர் எனப்படுவர். தேவியார் ஞானப்பூங் கோதை என்று கூறப்பெறுவார். விநாயகர் ஐந்சந்தி விநாயகர் ஆவார். இத் தலத்து விருட்சம், கல்லால விருட்சம். (அது விழுது இரங்காத் ஆல் விருட்சம்.) அகண்ட வில்வ மரமும் இத்தலத்து விருட்சமே, தீர்த்தங்கள், பொன் முகரி, சூரிய் தீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதிதீர்த்தம் என்ப்ன. இத் தலத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலும் உண்டு. இதனைத் தெற்கு நோக்கி வந்தால் கண்டு வணங்கலாம். இதில் விஷ்ணு ஆலயமும் உளது. மலே அடிவாரமாக ஐந்தாறு கல் சென்ருல் தெலுங்கு மக்கள் கூறும் வெய் லிங்கக் கோன (ஆயிரம் லிங்கமுடை தலம்) என்னும் கோயிலையும் கண்டு வணங்கலாம். இதனை அடர்ந்த காட்டைக் கடந்து சென்று தரிசிக்கவேண்டும். இங்கும் மக்கள் வாழ் கிருர்கள். சிறு ஒடை ஒன்று ஒடுகிறது. .

கடைவீதியிலும் திருக்கண்ணப்பர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிருர். அத் திருவுருவ்ை யும் கண்டு தரிசிக்கலாம். . .

திருக்காளத்தியில் தனித்தனி இரண்டு சிறு குன்றுகள் இருக்கின்றன. ஒரு குன்றில் துர்க்கை கோயில் உளது. மற்ருெறு குன்றில் குமரன் கோவில் உளது. இரண்டிலும் ஏறிச் செல்ல நல்ல படிகள் உண்டு. திருக்கள்ளத்தியில் பல சத்திரங்கள் உள்ளன. திருக் காளத்தியின் காலி கோபுரமும், மண்டபமும் ரீகிருஷ்ண் தேவராயரால் கட்டப் .5ET.سi-i ل!