பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி # 33

இங்குள்ள இறைவர்க்குரிய பெயர்களுள் குடு உமித்தேவர் என்பதும் ஒன்று. இது நாணன் என்னும் வேடனுல் திருக்கண்ணப்பருக்கு உணர்த்திய பெய ராகும். அவனுக்குக் காளத்தி நாதர் என்னும் பெயர் தெரிந்திலது. இறைவர் குடுமி (மலேஉச்சி) மீது இருத்தலின், இப்பெயரை அமைத்துப் பேசினன். ஆணுல், இதுபற்றி ஒரு வரவாறு கூறப்படுகிறது. அரசன் அன்புடன் தினம் தினம் இறைவருக்குச் சாத்தும்படி மலர் மாலேகளே அனுப்புவது வழக்கம். கோயில் அர்ச்சகணுே இறைவருக்குச் சாத்தாமல் தனது காதல் மனேவிக்குச் சாத்தியபின் அரச னுக்கு அனுப்புவது வழக்கம். அரசனுக்கு இது தெரியாது. இறைவருக்குச் சாத்திய பிறகே தனக்கு வந்து சேர்வதாக எண்ணி மகிழ்ந்து ஏற்றுக் கண்களில் ஒற்றித் தன் முடியில் சூடிக் கொள் வான். ஒருநாள் காதல் கிழத்தியின் முடி (மயிர்) ஒன்று மாலையில் சிக்கிக் கொண்டது. அதனேக் கவனியாமல் அரசனுக்கு அர்ச்சகன் அனுப்பி விட் டான். அரசன் கண்களில் அம் முடி காணப்பட்டது. உடனே அர்ச்சகனை வரவழைத்துக் காரணம் கேட் உனன். அவன் பயந்து எப்படியேனும் உயிர்தப்ப வேண்டுமென்று பொய் கூறவேண்டி, அரசரே காளத்தி அப்பருக்குக் குடுமிஉண்டு. அக் குடுமியின் ஒரு முடி இதில் சிக்கிக் கொண்டது போலும்!” என்று கூறிஞன். 'அரசன் இறைவருக்குமா முடி யுண்டு ! நான் பார்க்க வேண்டும். நாளை வருகின் றேன்' என்று கூறி அர்ச்சகனை அனுப்பி விட்ட னன். அர்ச்சகன் தன் வீடு திரும்பி இறைவனிடம் தன் தவற்றைச் சொல்லி முறையிட்டனன். இறை வர் அன்று இரவு அவன் கனவில் தோன்றி, ‘அன் பனே! அஞ்சாதே நாளே அரசன் வந்து பார்க்கும் போது நாம் தலையில் உச்சிக் குடுமி யுடன் இருப் போம்” என்று சொல்லி மறைந்தார். அரசனும் மறு