பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 165

பூசையின் பொருட்டு நன்செய், புன்செய் நிலங்கள் மாதவராயன் என்பவனுல் கொடுக்கப்பட்டன.

தியாகேசன் என்னும் திருமடமும் ஒன்று இருந்தது. இங்கு நாள்தோறும் முப்பது யாத்திரீகர் களுக்குச் சோறும், ஐந்து பிராமணர்கட்கு அரிசியும் கொடும்பதற்குத் தியாக மேனன் என்பவன் ஏற். பாடுகள் செய்திருந்தான். இத் தலத்து வடக்கு விதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்ற பெயரிலும் ஒரு மடம் உண்டு. -

திருக்காளத்தி உடைய நாயனரின் திருமலே ஆயின் அடி வாரத்தில் ஒரு நந்தவனம் இருந்தது. அதற்கு வீர நரசிங்க மாதவன் நந்தவனம் என்பது பெயர். இஃது அவனுல் உண்டாக்கப் பட்டது. இது பழுதுருதிருக்கப் பொன்னும், நெல்லும் பெற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனன். இதுவே அன்றி ஆலால சுந்தரர் பெயரில் ஒரு நந்தவனம் இருந்தது. ஒரு பாக்குத் தோட்டத்திற்குக் கண் -ணப்பர் தோட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது. மண்டபமும் தாழ்வாரமும் புத்தங்கையார் என்னும் அம்மையாரால் கட்டப் பட்டன.

இராசேந்திர சோழன் காலத்தில் கார்த்திகைத் திட விழா சிறப்புடன் நடத்தப்பட்டது. இதற்குக் கங்கை கொண்ட சோழ மயிலாடுடையான் நிவந்தம் அளித்துள்ளான். அளவு கருவிக்குக் காளத்தி யுடையான் மரக்கால் என்பது பெயர். மூன்ரும் பிராகார மண்டபம் சின்னேயா மண்டபம் எனப்படும்.

திருக்காளத்தி அப்பரது பெயர், பட்டப் பெயராக ஒரு தலைவனுக்குத் திருக்காளத்தி தேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்கு மன்ருடி காரி சாத்தான் திருக்காளத்தி கோன் என்றும் சூட்டப் § 3 L-L-6&T, -