பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இங்குக் கூறப்பட்ட செய்திகள் ஆனத்தும் திருக்காளத்தியில் கிடைத்த தமிழ்த் థ్రి(ఈ செய்திகளாகும். இதல்ை திருக்காளத்தியில் முழுத்து முழுக்கத் தமிழ் மொழி முன் காலத்தில் பேசப்பட்டு வந்ததை அறிக.

1433ஆம் ஆண்டு தெலுங்கு கல்வெட்டின் மூலம் நூற்றுக்கால் மண்டபமும், பெரிய கோபுரமும் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டன என்பது தெரிகிறது.

திருக்காளத்தியிலிருந்து பஸ் மூலம் சென்று திருப்பதி வேங்கடாசலபதியையும் கண்டு வணங்க லாம். இது கீர்த்திபெற்ற ஒரு வைணவத் தலம். ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய கூேடித்திரம்.

திருக்காளத்தியில் முத்தி பெற்றவர் திருக் கண்ணப்பர். இவரது வரலாற்றுச் சுருக்கம் பின்வரு மிாது:

இவர் பொத்தப்பி நாட்டில் நாகன் தத்தை என்னும் வேடர்குலப் பெற்ருேர்களுக்குப் பிள்ளே யாகப் பிறந்தார். இவர் திண் என்று இருந்ததால் திண்ணன் என்று அழைக்கப்பட்டார். இவர் இளவரசு பட்டம் பெற்று, காட்டிற்கு வேட்டையாடப் போனுர். இவருடன் நாணன், காடன் என்னும் இருவரும் புறப்பட்டனர். திண்ணணுர் ஒரு பன்றி யைக் கொன்ருர், அதனைப் பக்குவப் படுத்தக் காட ளிைடம் கூறி, நானனுடன் மலைமேல் சென்ருர். சிவலிங்கத்தைக் கண்டார். அவர் தனியே இருப்பது குறித்து அவரை விட்டுப் பிரியாராயினுர். சிவலிங் கத்தின்மீது பூவும் நீரும் இருக்கக் கண்டு, அதற்குக் காரணம் என்ன என்று நாணனைக் கேட்டார். நாணன், 'இவரை பிராமணர் இ வ் வாறு செய்து வழிபடுவர்; அவர் இட்ட பூவும் நீருமே இவை என்ருன். உடனே தாமும் அவ்வாறு வழிபட

{:ք