பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 1 63

சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ருெரு கண்ணிலும் செந்நீர் வரக்கண்டு வருந்தி, இனி இதற்கு அஞ்சேன், மருந்து கைமேல் கண்டேன்' என்று மற்ருெரு கண்ணேத் தோண்டி வைக்க முயன்ற போது இறைவர்,

'நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பளன் றின் னு;ை அதைெடும் எழில்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமர்ைக் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்து அருளினன்’

-நக்கீரர் திருக்கண்ணப்பதேவர் திருமறிம்.

இறைவர் திருவருள் புரிந்ததைச் சேக்கிழார், "என் வலத்தில் மாறிலாய் நிற்க' என்று இறைவர் அருளியதாக விளக்கிப் போந்தார். இவ்வாறு காளத்தி அப்பர் பக்கலில் இருப்பதை இன்றும் திருக் காளத்தி மூலட்டானத்தில் பார்க்கலாம்.

இவர் இறைவர்க்குக் கண் அப்பிய காரணத்தால் கண்ணப்பர் எனப்பட்டார்.

இவரது வரலாற்றை நக்கீரர் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்று பாடியருளினர். கல்லாட தேவ நாயஞரும் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்ற பெயரில் இவரது சரித்திரத்தைப் பாடியுள்ள னர்.இந்நூலின் இறுதியில் கண்ணப்பர் திருவடியைத் தொழுதால் பிறப்புக்குக் காரணமான தீவினை ஒழியும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை,

'திருவேட் டுவர்தம் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே” என்னும் வரிகளில் காண்க.

தோன்றல் (கண்டுக்) கண்ணப்பர் (தோன்றல். ஆண் களில் சிறந்தவர்) தடம் - நீண்ட, எழில் - அழகிய.