பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

என்னும் பாடலே எழுதிக்கொடுக்க, அதைப் பாண்டி யனிட்ம் கொடுத்தனன். இப்பாட்டின் கருத்து, *வண்டே உள்ளதை உள்ளவாறு சொல்லுக அதாவது, பாரபட்சம் @ು6ುಬ್ಜು சொல்லுக. இந்தப் பெண்ணின் கூந்தலின் மணம்போல மணம்பெற்ற பூஉனக்குத்_தெரியுமா? என்பது. வண்டுக்கு எல்லா மலர்களின் மணமும் தெரியும். ஆணுல், அரசியின் கூந்தல் மணம்_போன்ற மணம் எம் மலரினும் அது நுகர்ந்தது இல்லே. ஆகவே அரசியின் கூந்தலிலிருந்து வந்தமணம் மலர் முடித்த தல்ை இன்றி, இயற்கையான மணம் நிறைந்தது என்பது இதனுல் பெறப்பட்டது.

அப் பாட்டில் பாண்டியன் தன் மனைவியின் கூந்தல் மணம் இயற்கை மணம்பெற்றது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 冷 @ಕಲ್ಲು பாண்டியன் ஆப் ப்ாடலைப் படித்து அதன் உள்பொருளே உணர்ந்து

மகிழ்ந்து பொற்கிழியை எடுத்துக்கொள்ளக் கட்ட்னே இட்டனன். அதுபோது நக்கீரர் தடுத்தார்.

^్యఖ బ్లా

தருமி நக்கீரரை எதிர்த்துப் பேச ஆற்றல் இல்லாத வனுய் இறைவரிடம் முறையிட்டான். இறைவர், புலவர் வேடத்துடன் வந்து 'தேவ' மாதர்களுக்கு இயற்கை மணம் உண்டு என்று நக்கீரரிடம் வாதாடி ஞர். நக்கீரர் எந்தப் பெண்களாயினும் அவர்களுக்கு இயற்கை மணம் இல்லவே இல்லை என்று எதிர்த்துப் பேசினர். அதுபோது சிவபெருமான் நீ வழிபடும் திருக்காளத்தியிலுள்ள தேவியான ஞானப் பூங்கோ தையின் கூந்தலும் செயற்கை மணமுடையதோ?” என்று கேட்டார். நக்கீரர் சிறிதும் அஞ்சாது" அதுவும் செயற்கை மனமுடையதே' என்றனர். அந்நிலையில் இறைவர் நக்கீரருக்குத் தாம் சிவபெருமான் என்பதை உணர்த்தத் தம் நெற்றிக்கண்ணேயும் சடையையும் காட்டினர். அதுபோதும் நக்கீரர்,