பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

'சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவெண் காளத்தி எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே" வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே திரைதரும் முகலியின் கரையினில் தேமலர் விரைதரு சடைமுடி காளத்தி விண்ணவன் நிரைதரு கழலினை நித்தலும் நினைமினே'

-மூன்ரும் திகுமுறை. இரண்டாவது பதிகத்தின் வழி நாம் அறிவன . இறைவர் தாரகாசூரனைக் கொல்லக் காளியை ஏவினர் என்னும் குறிப்பு, வல்லவரு காளியை வகுத்து வலியாகிமிகு தாரகனநீ கொல்என விடுத் தருள் புரிந்தசிவன்” என்னும் வரிகள் அறிவிக் கின்றன. .

இறைவர் சலந்தராசூரனைச் சக்கரத்தால் கொன்றதை,

ஆரும்எதி ராதவலி ஆகிய

சலந்தரனே ஆழி அதனுல் ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்' என்றும் பாடியுள்ளனர். சிவபெருமான் எல்லாமாய் இருத்தலைச் சகல சிவன்' என்னும் தொடர் அறி வித்து நிற்கிறது.

சந்தம் - சந்தனம். விரை வாசனை. அகில் - அகில் கட்டை, மா - சிறந்த உந்தி - தள்ளி, திரை அல. முகலி பொன்முகலி ஆறு. தே - தேன் நிறைந்த விரை - கலந்த, விண்ணவன் - தேவன். கழல் இணை இரண்டு திருவடிகள், ஆழி - சக்கரம், ஈரும் - பிளக்கும்.