பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 183

நடைபெறுகின்றன? ஒரு நாளைக்கு ஐந்து முறையோ ஆறுமுறையோ ஐந்தாறு பிராம்மண்ர்களைக்கொண்டு இறைவரது நூற்றெட்டோ, ஆயிரத்தெட்டோ பெயர் அடங்கிய புத்தகத்தை ஒவ்வொருவரையும் படிக்கச் செய்து, ஒருவர் இறைவர் திருமுன் நின்று மலர் இடச்செய்வதே ஆகும். இவ்வாறே இறைவருடைய திருப்பெயர்களைத் தேவார திருவாசகங்களின் ஏனைய திருமுறைகளிலிருந்து தேர்ந்தேடுத்து இலட்சக் கணக்கிலும், கோடிக் கணக்கிலும் தமிழ் அர்ச்சனே புரியலாமே. இப்படியே அந்தந்தத் தெய்வங்கட் குரிய பெயர்களுடன் போற்றி என்று இணைத்து அர்ச்சனே புரியலாமே. இத்தகைய தமிழ் அர்ச்சனை யைச் செய்வதில் கோயில் அர்ச்சகர்கள் பின்வாங் கார். நாம் அவர்களேத் தமிழில் அர்ச்சனே செய்யு மாறு வேண்டாதது நம் குறையே ஆகும். நாம் வேண்டினுல் அவர்கள் தம்மை இம் முறையில் அர்ச்சனே செய்ய முன்வருவர். ஆகவே அன்பர்கள் இனியாகிலும் தமிழால் அர்ச்சனே நடத்திக்கொள்ள முன் வருவார்களாக,

மற்ருெரு முறையிலும் அர்ச்சனையை நடத்த லாம். கோவில்களில் எத்தனையோ சிவலிங்கங்கள் உண்டு. அவற்றின்முன் நாம் மலர்களைப் பறித்து வைத்துக் கொண்டு இறைவரின் திருப்பெயர்களாக அமைந்த தமிழ்ப் பெயர்களைச் சொல்லி ஒவ்வொரு மலர் இட்டும் வழிபடலாம்.

நிறைமொழி மாந்தர் ஆஃணயில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று கூறுபவர் நம் தொல்காப்பியர்.

அப்பரது தாண்டகத்தில் கீழ்வரும் தொடர் களைக் காண்க.