பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

கூறியுள்ளனர். அடியார்கள் தொழுதேற்ற அருளு வான்’ என்பதையும் அறிவித்துள்ளனர்.

இறைவன் அன்பர்களின் மனத்திலும், வாக்தி லும் இருப்பவன் என்றும் தன் அடியைப் பாடும் தொண்டர் கூட்டத்தில் இருப்பவன் என்றும், எல் லாப் பொருள்களிலும் நிறைந்தவன் என்றும் கூறி யுள்ளனர். அப்பர் பெருமான் தம்பதிகத்தின் ஈற்றுப். பாடலில் இராவணனைப்பற்றிக் குறிப்பிட்டுப் பாடுவது இயல்பு. ஆல்ை இத் தாண்ட்கத்தில் அக் குறிப்பு

வ லே.

"நாரணன் காண் நான் முகன் காண் நால்வே தன் காண்

ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன பூரண ன் காண் புண்ணியன்காண் புராணன் தான் காண் புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான் காண் காரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண்

தன்மைக்கண் தானே காண் தக்கோர்க் கெல்லாம். காரணன் காண் காளத்தி காணப் பட்ட

கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.”

'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள் ளான்

வாயாரத் தன் அடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையர்தம் சிரத்தின் மேலான் ஏமுண்டத் தப்பாலான் இப்பால் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள் ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான் (உள்ளான்

காளத்தியான் அவன் என் கண்ணு ளானே'

நாவாய் - கப்பல். புரானன் - பழமையோன், மனத் தகத்தான் - மனத்திலுள்ளவன். இமயவர் - தேவர். இனம். கூட்டம். போது - மலர். பொருப்பு - மல. கனம் மேகம்.