பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 18富广

தேனப்பூ வண்டுண் ட கொன்றை யான் காண்

திருஏகம் பத்தான் காண் தேன்.ஆர்த் துக்க ஞானப்பூங் கோதையான் பாகத் தான் காண்

நம்பன்காண் ஞானத் தொளிஆ குன்காண் வானப்பே ருரும் அறிய ஒடி

மட்டித்து நின் ருன் காண் வண்டார் சோலைக் காணப்பே கூரான் காண் கறைக்கண் டன்காண்

காளத்தியான் அவன்என் கண்ணு ளானே'

-திருத்தாண்டகம், திருக்காளத்தியைப் பற்றிச் சுந்தரர் பாடியுள்ள பதிகத்தின் வழி நாம் அறிவன :

இறைவரைப் பற்றிக் கூறும்போது அவர் செண்டு ஆடும் விடையன். கண்டார் காதலிக்கும் கணநாதன் என்றும், பொறுக்கும் தன்மையன், கருணையான், இடர்த் துணைவன் என்றும், என்குரு, மெய்யவன், திரு ஐயன் என்றும், ஆரா இன் அமுது. என்றும் கூறப்பட்டுள்ளனர். இவ்வாறேயன்றி, மற்றும் பலவாருக இறைவரை விளித்துள்ளார்.

இறைவர் தமக்குத் திருவருள் புரிந்த நிலையினைச் சுந்தரர், “செய்யவகிையே வந்து இடரானவை தீர்த்தவனே என்றும், "என்னுள் குடியாகக் கோயில் கொண்ட குழகன்' என்றும், ஒளியாய்வந்து என் உள்ளம் புகுதவல்ல எம்பெருமான்’ என்றும், பாடுவதிலிருந்து சுந்தரர் உள்ளத்தில் இறைவர் குடிகொண்டிருந்தார் என்பது புலனுகிறது.

ஆர்ந்து - நிறைந்து. உக்க சிந்த மட்டித்து நின்ருன்எல்லா உலகத்தையும் எஞ்சாது ஒடுக்க வல்லவன்.

செண்டாடும் விடையான் - குதிரையைப் போன்று. விரைவாகச் செல்லும் இரிடப வாகனத்தை யுடைவன்.

செய்யவனுகி , செம்மை நிறத்தையுடைய வேதியணுகி (அதாவது கந்தரரை ஆட்கொன்ளவந்த பிராமணர் வடிவம்}