பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 1 S5.

திருஒற்றியூர் எழுத்தறியும் பெருமான் சந்நிதி யின் உட்பிராகாரத்தில் ஆதிசங்கரர் உருவமும், லகுலீசர் உருவமும் உள்ளன. இக் கோவிலின் கர்ப்பக் கிரகப் கஜப்பிருஷ்ட (யானையின் பிட்டம் போன்று அரை வட்டமானது) வடிவில் அமைந்தது. இதற்குமேல் உள்ள விமானம் ராஜேந்திரசோழனுல் கட்டப்பட்டது

திருஒற்றியூரில் பல சத்திரங்கள் உள. ராஜேந்திர சோழன் மடம், குலோத்துங்க சோழன் மடம் இருந்தனவாகக் கருதப்படுகிறது. மண்ணே கொண்ட சோழன் மண்டபம், ராஜராஜன் மண் டபம், ராஜேந்திர சோழன் மண்டபம் எனப் பல மண்டபங்களும் இருந்திருக்கின்றன.

கோயிலைச் சுற்றி வரும்போது வட்டபலி நாச்சி யார் என்னும் துர்க்கை கோவில் உளது. இச் சந்நிதிக்கு முன்பு ஒரு கிணறு போன்ற வடிவம் காணப்படுகிறது. அக் கிணறு ஒரு வட்டமான பாறை யினுல் மூடப்பட்டிருக்கிறது. இவ்வம்மையாருக்குச் சித்திரை மாதம் பதினெட்டு நாள் திருவிழா நடக் கிறது. இவ்வம்மையார்க்கு உயிர்ப்பலி இடுதல் உண்டு. இவ்வாறு உயிர்ப்பலி இடுவதால், படம்பக்க நாதருக்குச் சம்புரோட்சணம் செய்யப்படுகிறது. சங்கராசாரியார் இந்தத் துர்க்காதேவியின் உக்கி ரத்தை அடக்கி, அவள் சந்நிதிக்கு வெளியே இருக்கும் கிணற்றில் இறக்கிப் பாறையினுல் மூடிஞர் என்று கூறப்படுகிறது.

திலீப மகராசனுக்கும் தியாகர் நடன தரிசனம் தந்துள்ளனர். நடராசர் சந்நிதிக்குப் பின் திருமால் சிலே இருந்ததாகக் தெரிகிறது. ஆளுல் அஃது இதுபோது மறைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் அமைந்துள்ள சிறு ஆலயங்கள் அரீஞ்சீஸ்வர முடையார், கம்பீஸ்வரமுடையார், விடேல் விடு கஸ்.