பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சுந்தரர் தமது கண் பார்வை இழந்து வருந்தும் வருத்தத்தை ஒரு முழுப் பாட்டில் தெள்ளத் தெளியப் பாடிக் கசிந்து உருகி உள்ளனர். அப் பாடல், -

மகத்தில் புக்கதோச் சனிஎனக் காணுய்

மைந்த னேமணி யேமண வாளா அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னுல் அழையேல் போகுரு டாஎனத் தரியேன் முகத்தில் கண்ணிழந் தெங்கனம் வாழ்கேன் முக்க முைறை யோ மறை யோதி உகைக்கும் தண்கடல் ஒதம்வந் துலவும் ஒற்றி ஆர்எனும் ஊர் உறை வானே" என்பது. -

இத் தலத்தில் சக்கரப்பாடி என்னும் தெருவில், வாணியர் குலத்தில் பிறந்த சிவபக்தர் இருந்தார். அவர் பெயர்கலிய நாயனுர் என்பது. அவர் கோயி லுக்கு விளக்கு ஏற்றும் தொண்டில் ஈடுபட்டவர். எண்ணெய் விற்றுத் தேடிய பொருள் நாளுக்கு நாள் குறைந்தது. ஆணுல், நாயனர் தம் திருத்தொண்டை முட்டு இன்றி நடத்தி வந்தனர். கூலிக்கு வேலை செய்து எண்ணெய் விற்றும் தொண்டு செய்தனர். எண்ணெய் கொடுப்பதையும் அவர்கள் மரபினர் நிறுத்திவிட்டனர்.

தம் தொண்டுக்குத் தடை வராதிருக்கத் தம் மனேவியாரை விற்க விலே கூறினர். அவ்வம்மை யாரை யாரும் வாங்குவார் இல்லை. ஆகவே, எண்

மகத்தில் புக்கதோர் சனி சிம்மராசியில் ば @ நட்சத்திரத்தில் புகுந்த சனி, அகத்தில் . வீட்டில், உகைக்கும் - தள்ளும். ஒதம் - அலேயின் ஈரம். மகத்தில் சனி புகுந்தால் நாட்டுக்குக் கெடுதி. அந்த ராசியில் பிற்ந்த சாதகனுக்கும் துன்பம் மிகுதி.