பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இப் பதிகத்தில் மொந்தை, தாளம், தகுணிச்சம் ஆகிய இசைக் கருவிகள் கூறப்பட்டுள்ளன. இப் பதிகத்தில் வரும் கழலும் சிலம்பும் ஒலிப்ப' என், தொடர் அம்மை அப்பரது அருட்கோலத்தை நினைவூட்டுவதாகும்.

ஈற்றுப் பாடலில் தம்மைச் சீர்காழித் தலைவன் என்றும், தமிழ்ஞான சம்பந்தன் என்றும் தமது பாடல் பண்ணுடன் அமைத்துப் பாடப்பட்டது என்றும், இப் பதிகத்தைப் பாடிப் பரமனை வணங்க வல்லவர் விண்ணுலக இன்பம் அடைவர் என்றும், அவர்கள் முத்தி இன்பம் பெறுதல் எளிது என்றும் பாடியுள்ளனர். இக் கருத்துகளே,

"ஒண்பிறை மல்குசென்னி இறைவனுறை ஒற்றியூரை சண்பையர் தம்தலேவன் தமிழ்ஞானசம் பத்தன் சொன்ன பண்புனே பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார் விண்புனே மேல் உலகம் விருப்பெய்துவர் வீடெளிதே' எனும் பாடலில் காண்க.

  • விளிதரும் நீரும்மண்ணும் விசும்போடனல் காலும் ஆகி அளிதரு பேரருளான் அரளுகிய ஆதிமூர்த்தி களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றை யினுேடனிந்து ஒளிதரு வெண்பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே”

-மூன்ரும் திருமுறை, திருநாவுக்கரசர் பாடியுள்ள முதல் திரு நேரிசை வாயிலாக நாம் அறிவன : -

அப்பர் இத்தலத்தைப்பற்றிப்பாடிய பாடல்களில் நல்ல உபதேசங்களே அறிவித்துள்ளனர்,

மல்கு-விளங்கும். சண்பையர்தம் தலைவன் - சீர்காழித் தலைவர். பரவி - போற்றி. ஏத்த புகழ. விளிதரும் - பிரளய காலத்தில் அழிக்கும். விசும்பு - ஆகாயம், கால் - காற்று. பண் - இசை, உறையும் . வாழும். -