பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 2 : 7

'எல்லாம்தான் இவ்வடிகள் யார்என் பாரே

திருஒற்றி ஊர்புக்கார் தீய வாறே"

'நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன

ஒல்லைதான் திரைஏறி ஒதம் மீளும்

ஒளிதிகழும் ஒற்றியூர் என்கின் ருரே' 'திருஒற்றி ஊர் நம் ஊர் என்று போளுர்

செறிவளைகள் ஒன்ருென்ருச் சென்ற வாறே'.

'நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்

நெருதலநல் பகல் இங்கோர் அடிகள் வந்து கலைப்பாடும் கண்மலரும் கலக்க நோக்கிக்

கலந்துபலி இடுவேன் எங்கும் 54 36ধ্যে সে சலப்பாடே இனி ஒருநாள் காண்பேன் ஆகில்

தன் ஆகத் தென்ஆகம் ஒடுங்கும் வண்ணம் முலைப்பாடே படத்தழுவிப் போகல் ஒட்டேன்

ஒற்றியூர் உறைந்திங்கே திரிவா னேயே’ என்பன அவ்வகப்பாட்டு வரிகளும், பாடலும்

ஆகும.

“நிலைப்பாடே என்னும் தாண்டகத்தில் தலைவி தன் முலைகளால் இறைவராம் தலைவரைக் கட்டி வெளியே செல்ல ஒட்டாமல் செய்வேன்' என்று கூறியுள்ளது இன்பச் சுவையைப் பயப்பதாகும்.

இத்தலத்து இறைவியாரின் பெயர் வடிவாம் பிகை என்னும் குறிப்பை வடிவுடை மங்கையும் தாமும்” என்னும் வரியில் காணலாம்.

ஒல்லை - விரைவாக. திரை - அலை. செறி வளைகள் - கையில் நெருங்கி இருந்த வளையல்கள். ஏ.டீ - ஏண்டி தோழி. நெருநல் - நேற்று. கலப்பாடு - ஆடையின் பெருமை. சிலப்பாடு - வஞ்சகம். ஆகம் , மார்பு.