பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருக்ஒற்றியூர் 223

எட்டாவது பாட்டில் தம் மனத்துக்கு உரைப்பார் போல், மனமே வாடி இருந்து என் செய்வாய்? நான் உற்றவல்வினைக்கு அஞ்சிப் பிணங்கில்ை யாது பயன்? 'ஒற்றியூர் உறைவானே, மலைமங்கையைக் கூடினுேய், ஆயிரமுகமுடைய கங்கையாளேச் சூடினுேய்’ என்று அழைத்து நம் குறையை முறை யிட்டால் அடியவனை எனக்கு ஏதேனும் அவன் வழிவகை உரைக்கவும் கூடும். ஆகவே வா. போற்றுவோம்' என்னும் கருத்தில் பாடியுள்ளனர்.

கூடி ய்ைமலை மங்கையை நினையாய்

கங்கை ஆயிரம் முகமுடை யாளேச் சூடினுய் என்று சொல்லிய புக்கால்

தொழும்பனே னுக்கும் சொல்லலும் ஆமே வாடி நீஇருந் தென் செய்தி மனனே

வருந்தி யான் உற்ற வல்விக்னக் கஞ்சி ஊடி ல்ைஇனி ஆவதொன் றுண்டே

ஒற்றி ஊர் எனும் ஊர் உறை வானே’’

இப்பாட்டில் மேற்சொன்ன கருத்துகளைக் காண்க.

சுந்தரர் தம் குறைபாட்டை எந்தெந்த முறை யிலோ இறைவரிடம் முறையிட்டுக் கொண்டனர். ஆனல், இறைவர் அந்தநேரத்தில் எவ்வித நன்மை யையும் செய்திலர். அதனுல் சுந்தரர் சிறிது சினம் கொண்டனர். சினம்கொண்டு இறைவரை வையவும் தொடங்கினுர். "இறைவரே நீர் மகம் நட்சத்திரத் திற்கு உரித்தான சிம்ம ராசியில் புகுந்த சனிபோல எனக்குத் துன்பம் செய்தவர் ஆகின்றீர்' என்றனர். பின்னர்தாம் அவ்வாறு கூறியது தவறு என்று உணர்ந்து "மைந்தனே, மணியே, மணவாளா, முக்களு, மறைஓதி' என்று விளிப்பாராயினர். தாம்

சொல்லிய - சொல்லி. புக்கால் . புகுந்தால். த்ொழும்பி னேன் தொண்டனேன். ஆடினுல் பிணங்கில்ை, .