பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 225

சீலம் தான்பெரி தும்மிக வல்ல

சிறுவன் வன்தொண்டன் ஊரன் உரைத்த பாடல் பத்திவை வல்லார் தாம்போய்ப்

பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே” என்பது.

திருஒற்றியூரின் இயற்கை வளன், :சங்கும் சிப்பியும் சலஞ்சம் முரல

வயிர முத்தொடு பொன்மணி வரன்றி ஒங்கு மாகடல் ஒதம்வந் துலவும் ஒற்றியூர்” 'உகைக்கும் தண்கடல் ஒதம்வந் துலவும் ஒற்றியூர்" என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது.

சுந்தரர் இத்தலத்தின்மீது பாடிய மற்ருெரு பதிகமும் உண்டு. இதில் இறைவரைப்பற்றி,

'பாட்டுப் பாடிப் பரவித் திரிவார்

ஈட்டும் வினைகள் தீர்ப்பார்'

பந்தும் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார்'

அடைவார் வினைகள் அறுப்பான்' வினைய வீட்ட நன்று நல்ல நாதன்'

கலவ மயில்போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப் படியான்'

• உலகில் உள்ளார் வினைகள் தீர்ப்பான்’ எற்றும் வினைகள் நீர்ப்பார்’

என்று கூறப்பட்டுள்ளதைக் காண்க.

பரவி - போற்றி, பயிலும் . (கொண்டு) விளையாடும், பாவை - பார்வதி. வீட்ட - அழிக்க. கலவம் - தோகை, படியான் - வடிவுடையவன். எற்றும் வந்து மோதும்,

  1. 5