பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 22 7

'படையார் மழுவன் பால்வெண் ணிற்றன் விடையார் கொடியன் வேத நாவன் அடைவார் வினைகள் அறுப்பான் என்ளை உடையான் உறையும் ஒற்றி யூரே'

-ஏழாம் திருமுறை.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மீது உாடிய திருப்புகழ் இரண்டு. அவற்றுள் ஒன்று,

கரியமுகில் போலும் இருள் அளக பார

கயல்பொருத வேலின் விழிமாதச் கலவிகளில் மூழ்கி மிருகமத படீர -

களபமுலே தோய அ2ணயூடே விரகமது வான மதன கலை ஒது

வெறியன் என நாளும் உலகோர்கள் விதரணம் தான வகை நகைகள் கூறி

விடுவதன்முன் ஞான அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்

அவர்கள் புகழ் ஒத - புவி மீதே அதிகநட ராசர் பரவுகுரு ராச -

அமரர்குல நேச குமரேசா சிரகர கபாலர் அரிவையொரு பாகர்

திகழ்கனக மேனி புடையாளர் திருவளரும் ஆதி புரியதனில் மேவு

செயமுருக தேவர் பெருமாளே.

-திருப்புகழ்.

படை - ஆயுதம், விடை - எருது. முகில் - மேகம். அளகம் கூந்தல். கலவி புணர்ச்சி. அனேயூடு . படுக்கையில் விரகம் - காம இச்சை. பரவு - போற்றும். அமரர் தேவர். அரிவை பார்வதி, கநகமேனி - பொன் திறமான திருஉருவம். ஆதிபுரி - திருஒற்றியூர். பொருதய மோதிய, மருகமதம் - கஸ்தூரி. களபம் - சந்தனம், விதரணமதான - சுறுக்கென்று தைக்கும்படியான. -