பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திருவலிதாயம் 233

சீர்காழி தாழைகள் நிறைந்த கடல் கரையைச் சார்ந்தது என்றும், இப்பதிகத்தை இசையுடன் பாட வல்லவர்கள் வான் உலகில் உயர்ந்து விளங்குவர் என்றும் ஈற்றுப் பாடலில் அறிவித்துள்ளனர்.

இத்தலத்து முருகர் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒன்றே உளது.

மருமல்லி யார்குழலின் மடமாதர்

மருள் உள்ளி நாயடியன் அலேயாமல் இருநல்ல வாகுமுன தடிபேண

இனவல்ல மான மன தருளாயோ கருநெல்லி மேனிஅரி மருகோனே

கனவள்ளி யார்கனவ முருகேசா திருவல்லி தாயம் அதில் உறைவோனே

திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.

- திருப்புகழ்

மரு . வாசனே. குழல் - கூந்தல், மடமாதர் . இளேய பெண்கள். மருள் - மயக்கம். பேண - போற்ற. உள்ளி. நினைவு கொண்டு. உறைவோனே - வாழ்வோனே.