பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-235 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கோவில் விஜய நகரத்து அரசரால் கட்டப்பட்டது. இறைவர் கோவில் ஆதொண்டைச் சச்ரவர்த்தியால் கட்டப்பட்டது. இங்குச் சித்திரை மாதம் பெருவிழா நடைபெறும். இவ்விழி முதல் முதல் பிரம்ம தேவ ரால் நடத்தப்பட்டதாகக் கூறுவர். ஒன்பதாம் நாள் நடக்கும் முல்லை அடி சேவை விசேடமானது. இத் தலத்திற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்று உளது.

இஃது எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத் தம். இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. இதன் பண் தக்கேசி. இக்காலத்து காம்போதி இராகம் என்று இதனை ஒருவாறு கூறலாம்.

இத்தலத்து இறைவருக்கு வெந்நீர் அபிடேகம் நடைபெறும். இறைவர் திருப்பெயர் மாசிலாமணி ஈஸ்வரர் என்பதைச் சுந்தரர் பதிகத்தின் வாயிலாக வம் அறியலாம், முல்லை வாயிலாய் மாசிலாமணியே என்று பதிகத்தின் ஐந்தாவது பாடலில் வருதல் -坂弈6örö。 -

இறைவர்க்குப் பாசுபதீேஸ்வரர் என்னும் பெயர் உண்மையை ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் * பாசுபதா பரஞ்சுடரே என்று விளித்திருப்பதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

திருமுல்லைவாயில் பாலாற்றங் கரையின் வடபால் உளது என்பதையும் சுந்தரர் தம் பாடலில் 'வட கரை முல்லை வாயிலாய்” என்று பாடி அறிவித்தலை யும் காண்க.

பிரம்ம சூத்திரத்திற்குச் சிவ பரத்துவ முறையில் பெருவிளக்க உரை எழுதிய நீலகண்ட சிவாசாரி யார் திருஉருவம் இக் கோயிலில் உண்டு. அவருக் கும் பூசையும் உண்டு.

இத்தலம் அம்பத்துனர் ஸ்டேஷனுக்கு இரண்டு கல் தொலைவில் உள்ளது. இதுபோது பஸ் போக்கு