பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வடதிருமுல்லைவாயில் 237

வரவு மிகுதியும் உண்டு. ஆவடி ரயிலடி வழியாக வும் இத்தலத்தை அடையலாம்.

இத் தலத்துக் கல் வெட்டுகளால் நாம் அறியத்தக்க குறிப்புகள்: இத் தலத்தில் சோழர் பாண்டியர் நாயக மன்னர் காலங்களில் செதுக்கப் பட்ட கல் வெட்டுகள் உண்டு. பார்த்திவேந்திர வர்மன் காலத்துக் கல் வெட்டுகளும் இருக்கின்றன.

மழவராயன் மகளாராகிய கண்டராதித்த பெருமாள் மனைவியாராம் செம்பியன் மாதேவியார் அம்பத்துராரிடமிருந்து நிலம் வாங்கித் திருமுல்லை வாயில் கோவிலுக்கு அளித்துள்ளனர். மண்டபத் தூண் கல் வெட்டு அந்த மண்டபம் கட்டப்பட்ட குறிப்பை அறிவிக்கிறது. ஜாடவர்மன் சுந்தர பாண்டிய தேவனின் கல் வெட்டுப் புழல் கோட்டத்தை விக்ரம சோழ வளநாடு என்று குறிப் பிடுகிறது. ċ·

இத்தலத்துச் சுந்தரர் பாடல், சுந்தரரின் வாழ்க். கைக் குறிப்புகளுள் சிலவற்றை நன்கு தெரிவிக்கும் முறையில் அமைந்துளது.

இவர் தம் கண் பார்வை இழந்து பெரிதும் வருந்திய நிலையை, 'பரவிடும் அடியேன் படுதுயர் களேயாய்” என்று பாடல்களின் இறுதிதோறும் பாடி இருப்பதனுல் உணரலாம். இவருக்குக் கண் பார்வை அருளும்படி,"தமிழால்பாடுவேற்கு அருளாய்"என்று முறை இடுவது சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. இதல்ை தமிழில் வேண்டுகோள் விடுத்தால் இறை வர் அருள்செய்வார் என்பது குறிப்பு. இறைவர் தமது கண் பார்வையை அழித்ததற்குக் காரணம், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியார்க்குக் கூறிய சத்தியத்தைப் பிழைத்ததனுல் என்பதையும் தண் பொழில் ஒற்றிமாநகருடையாய் சங்கிலிக்கா என், கண்கொண்ட பண்பா' என்று கசிந்து உருகிப் பாடி அறிவித்து இருப்பதுகொண்டு அறிக. சுந்தரர் தமது