பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

குற்றத்தை உணர்ந்து இறைவரிடம் முறையிட்டதை யும் மற்றுநான் பெற்றதார் பெறவல்லார் வள்ளலே கள்ளமே பேசிக், குற்றமே செயினும் குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகபல செய்தேன்' என்று பாடி இருத்தலேயும் படித்து அவர் உள்ளக் கசிவை உணரவும். இவற்ருேடு, இறைவர் இவரைத் திருவெண்ணெய்நல்லூரில் ஆட்கொண்ட நிலையினையும். நம்பனே, அன்று வெண்ணெய் நல் லூரின் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே . என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளதையும் அறிக.

சுந்தரர் சிவஞரது திருவருளேப் பெற்ற மகிழ்ச்சி யில்ை தாம் வாழ்ந்த நிலையினயும் அழகுற, * திருவும் மெய்ப்பொருளும் செல்வமும், எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருவரை மதியாது உருமைகள் செய்தும் ஊடியும் உறைப்ப ணுய்த் திரிவேன்' என்று பாடுதலையும் காண்க.

இத்தலத்து இயற்கை அழகு, 'முருகமர் சோலைசூழ் திருமுல்லை வாயில்’ :செண்பகச் சோலை சூழ் திருமுல்லே வாயில்’ பொன் நலம் கழனிப் புது விரை மருவிப்

பொறிவரி வண்டிசை பாட அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல் செந்நலம் கழனி சூழ்திரு முல்லை’ 'திணிபொழில் தழுவு திருமுல்லே வாயில்’ கதிரைதரு புனல் சூழ் திருமுல்லை வாயில்' என்று இயம்பப்பட்டிருக்கிறது.

உருமைகள்-பற்ருமை. ஊ.டி.பிணங்கி, உறைப்பனுய்அழுந்திய பற்றுடையகுய், முருகு - தேன். அம் - அழகு. விரை-மனம், மருவி.கலந்து, பொறி-புள்ளிகள், அலவன்வண்டு, திணி பொழில் நெருக்கமாக உள்ள சோலை. திரை - அலே.