பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திருவேற்காடு

இத் தலத்திற்கு வேலமரம் தல விருட்சம். ஆகவே, இது திருவேற்காடு எனப்பட்டது. இத் தலத்தை முருகப் பெருமான் சூரபதுமனேக் கொல்லும் பொருட்டு இறைவரது ஆசிபெறப் பூசித்துள்ளனர். முருகப் பெருமான் பிரமனேச் சிறை யிட்டதால் இறிை. வரைப் பூசித்து மன்னிப்பு வேண்டிய தலம். இங்கு முருகன் சிவலிங்கத்தை வழிபாடு செய்யும் கோலத் தில் நின்றிருப்பதைக் காணலாம். குமரன் வேல் ஏந் திய வேலனுகவும் காட்சி அளிக்கின்றன். அகத்தி யர்க்கு இறைவர் தாம் உமாதேவியை மணந்து கொண்டபோது, அக்கோலத்துடன் காட்சி தந்த தலங்கள் சில உண்டு. அங்ங்ணம் காட்சி தந்த தலங் களுள் திருவேற்காடும் ஒன்று. இவ்வுண்மையினை இன்றும் மூலத்தானத்திற்குப் பின் உமா மகேஸ் வரர் திருக்கோலம் அமைந்திருப்பதைக் கண்டு களிக்கலாம். அதாவது கல்யாண சுந்தரராக விளங் கும் காட்சியைக் காணலாம். இத்தலம் கூவ நதிக் கரையில் உளது. இந்நதியைப் பாலி நதி என்றும் கூறுவர். இங்குள்ள விநாயகப் பெருமானிடம் திரு மால் விகடக் கூத்தாடி அவரிடமிருந்து பாஞ்ச சன்யம் என்னும் சங்கைப் பெற்றதாகவும் கூறுவ துண்டு. இங்கு அகத்தியர், சூத முனிவர் உருவங் கள் இருக்கின்றன.

இத் தலத்து இறைவர் வேற்காட்டீஸ்வரர், வேதபுரீஸ்வரர் என்றும், இறைவியார் வேற்கண் அம்மை, பாலாம்பிகை என்றும் கூறப்படுவர்.

இங்கு வேதங்கள் வெள் வேலமரமாக விளங்க அதன் அடியில் பாலாம்பிகையுடன் வேதபுரீசர் விற்றிருக்கின்றர். இப்பெருமான் தயிலயில் நடந்த திருமணக் கோலத்துடன் வீற்றிருந்து அகத்திய