பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திருவேற்காடு - 龛45

இத் தலத்திற்கும் மூர்க்க நாயனுர்க்கும் தொடர்பு உண்டு. இவரது திருவுருவம் இங்கு உளது. இவர் பிறந்த ஊர் இதுவே. இவர் வேளாள மரபினர். இவர் தினமும் அடியார்களுக்கு உணவு அளித்த பின்பே உண்ணும் கடப்பாடு உடையவர். இவர் உணவு அளிப்பதை அறிந்த அடியார்கள் பலர் இவர் இல்லம் வந்து கொண்டிருந்தனர். இவர் களுக்கெல்லாம் உணவு படைத்துவந்ததால் இவரிட மிருந்த பொருள்கள் செலவாகிவிட்டன. இதனுல் இன்னது செய்வது என்பதை அறியாது திகைத் தனர். நாயனர் இத்தகைய அடியார் பத்தியில் சிறந்தவராயினும், இவரிடம் ஒரு தீய பழக்கம் இருந்து வந்தது. அதாவது சூதாடுவது, அதன் மூலம் பொருள் சம்பாதித்து அப் பொருளைக் கொண்டு அடியார்கட்கு உணவளிக்கத் திட்டமிட்ட னர். ஆணுல், தாம் பிறந்த திருவேற் காட்டில் தம்மோடு சூதாடுவாரைக் காண முடியவில்லை. ஆகவே, அவ்வூரை விட்டுப் பல இடங்களுக்குச் சென்று சூதாடி வென்று அதனுல் கிடைத்த பொருளேக் கொண்டு அடியார்கட்டு உணவு அளித்து வந்தனர். இந்நிலையில் கும் . கே ண த் ைத அடைந்தார். அங்குச் சிற்சில சமயங்களில் தோற்றும் போவார் ; பின் வெற்றிமேல் வெற்றி காண்பர். ஆட்டத்தில் மாறு பட்டவரைத் தம் வாளால் குத்துவார். இதனுல்தான் இவர் மூர்க்கர் என்னும் பெயரைப் பெறுவாராயினர். இவர் அடியார் கட்கு அமுது படைத்து வந்த காரணத்தால் மூர்க்க நாயனுர் என அழைக்கப்பட்டார். - -

- சூதாட்டத்தில் வந்த பொருளேத் தம் குடும்பத் திற்குப் பயன் படுத்தினர் இல்லை. அடியார்களே உண்பித்த பின்பே கடைசியில் உண்டு மகிழ்வர்.