பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடி யுள்ள பதிகம் ஒன்றே உளது. இஃது ஆசிரியத் துறையால் ஆனது. இதன் இலக்கணம் திருஒத் துார்ப் பதிகத்தில் கூறப்பட்டது. இதன் பண் பழந்: தக்க ராகம். இஃது இக்காலத்து அரபி இராகம் போன்றது என்பர்.

இத் தலத்தின் மாண்பைக் கூறவந்த திருஞான சம்பந்தர்,

வேற்காடு, உள்ளி யார் உயர்ந் தார் இவ் வுலகினில்

தெள்ளி யார் அவர் தேவரே'. :வேற்காடு, பாடி யும்பணிந் தார் இவ் வுலகினில்

சேடர் ஆகிய செல்வரே'. வேற்காடு, போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு

ஏதம் எய்துதல் இல்லையே'. :வேற்காடு, தாழ்வு டைமணத் தார்பணிந் தேத்திடப்

பாழ்ப டும் அவர் பாவமே'. :வேற்காடு, பாட்டி குல்பணிந் தேத்திட வல்லவர்

ஒட்டி ர்ைவினே ஒல்லையே”. வேற்காடு, நூலி குல்பணிந் தேத்திட வல்லவர்

மாலி ஞர்வினை மாயுமே". வேற்க:டு, சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்

செல்ல வல்லவர் தீர்க்கமே’.

உள்ளியார் - நினைத்தவர். தெள்ளியார் . அறிவு தெளிந்தவர். சேடர் - பெருமையுடையவர். போது . மலர். சாந்து - சந்தனம். புகை - தூபம். பழங்காலத்தில் கற்பூரம் கொளுத்தப்படவில்லை என்பதை அறியவும். ஏதம் - துன்பம், எய்துதல்-வந்தடைல், ஏத்திட-துதித்திட, ஒல்லை. விரவில், நூலிஞ்ல் - ஆகம நூலின் முறைப்படி. மாலினர் . மயங்கிடி, ஆன்மாக்கள். வினை - பாவம். தீர்க்கமே . நிச்சயம்,