பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திருவேற்காடு 24.7

வேற்காடு, வார மாய்வழி பாடு நினைந்தவர்

சேர்வர் செய்கழல் திண்ணமே”

வேற்காடு, ஈறி லாமொழி யேமொழி யாஎழில்

கூறி குர்க்கில்லே குற்றமே !'

என்று கூறியுள்ளனர். "ஈண்டுத் தமிழ் மொழியை ஈறு (அழிவு) இலா மொழி" என்று குறிப்பிட்டிருப் பதை நன்கு உணரவும். வடமொழி இக்காலத்தில் வழக்கற்ற மொழி என்று கூறப்படுவதை நினைவு கொள்க. அவர் காலத்திலும் அஃது அந்நிலை உற்றது போலும்! அதனை உட்கொண்டுதான் தமிழை ஈறிலா மொழி' என்றனர் என்க.

இறைவர் வெள்வேல மரத்தடியில் வீற்றிருக் கும் குறிப்பு வேலில்ை உறை வேற்காடு' என்னும் வரியால் விளங்குகிறது. இறைவர் வேதவித்தகன்' சமாறி லாமல ராளுெடு மால் அவன் வேறலான்’ என்று குறிக்கப் பெறுகிருர்,

இத்தலத்தின் இயற்கை அழகு விண்ட மாம் பொழில் சூழ்திரு வேற்காடு" என்று கூறப்பட் டுள்ளது.

மேலும், இப்பதிகத்தில் மற்றும் பல உண்மை களே உணர்த்தி யுள்ளனர் புகலியார். நாம் உயர்ந்த வற்றையே எண்ண வேண்டும். அப்படி எண்ணி ல்ை நற்கதி உண்டாகும்’ என்கிருர் . ஒள்ளிது உள்ளக் கதிக்கு ஆம்” என்னும் தொடரைக் காண்க.

வாரம்.அன்பு கழல்-திருவடி. எழில்-அழகு, உறை. தங்கி இருக்கும். வித்தகன் அறிஞன். மலரான் - பிரமன். விண் ட - மலர்ந்த, மாம்பொழில் . மாஞ்சோலே. ஒள்ளிது . உயர்ந்தது. உள்ள நினைக்க, கதி நல்லநிக்ல.