பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 2 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இவரது ஆலயமும் ஆறுமுகப் பெருமான் கோயில் அருகில் உள்ளது.

திருமயிலையில் சிவநேசச் செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அப்பெண்ணின் அறிவு, அழகு, வளர்ச்சி முதலானவற்றைக் கண்டு, மகிழ்ந்து அப்பெண்ணேத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்கத் தீர்மானித்துக் கோயிலுக்குப் பூத்தொண்டு செய்ய ஏற்பாடு செய் தார். அம்மகளின் பெயர் பூம்பாவை என்பது. அப்பெண் ஒருநாள் மலர் கொய்கையில் பூ நாகம் தீண்டியதும் இறந்தாள். அவ்விறந்த உடலைச் செட்டியார் எரித்து அதன் சாம்பலையும், எலும்பை யும் ஒரு மண் குடத்தில் வைத்துச் சேமித்துப் போற்றி வந்தார். திருஞானசம்பந்தர் அங்குத் தரிசனம் காரணமாக வந்தபோது, அவர் முன் சாம்பற் குடத்தை வைத்து நடந்தவற்றை நவின் ருர். திருஞானசம்பந்தர் இரக்கம்கொண்டு மட்டிட்ட” என்று தொடங்கும் பதிகம் பாடி எலும்பைப் பெண் ணுக்கினர். இந்த விழா இன்றும் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாள் குளக்கரையில் நடைபெற்று வருகிறது. இவ்வம்மையார் உருவமும், ஞானசம் பந்தர் உருவமும் கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில் ೩-5f ST65೯, -

திருமயிலையில் உலகம் போற்றும் உத்தமராகிய திருவள்ளுவர் கோவில் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்கிறது. அது முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெருவின் அருகில் உள்ளது. மயிலைக் கோயிலுக்கு வடக்கே அரை கல் தொலைவில் உளது. திருமயிலைக் கோவில் இறைவர் கபாலீஸ்வரர் என்றும், தேவியார் கற்பகாம்பிகை என்றும் கூறப் பெறுவர். விநாயகர் கூத்தாடு விநாயகர். விருஷம் புன்னைமரம். இதனைத் திருஞானசம்பந்தர் மட்