பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மயிலாப்பூர் 253.

டிட்ட புன்னேயம் கானல்' என்று கூறுதலால் உணர்ந்து கொள்ளலாம். தீர்த்தம் கபாலி தீர்த்தம். பெரிய குளம். இதுவே அன்றி இராம தீர்த்தம், சித்திரை தீர்த்தங்களும் உண்டு. இத்தலத்திற்கு அமைந்துள்ள மாடவீதி அழகுடையது. இதுகுறித்தே. அப்பர், மாடவீதி மயிலாப்பூர்' என்று சிறப்பித்துள் 蚤广6峦”。 - -

இதுபோதுள்ள திருமயிலைத் தலம் திருஞான சம்பந்தர் காலத்தது அன்று. அவர் காலத்தில் அது கடற்கரை ஓரத்தில் இருந்தது. அதாவது அலைகள் கோயில் அருகே வந்து வீசும் நிலையில் இருந்தது. இதன் உண்மை, திருஞானசம்பந்தர் ஊர்திரை வேலே உலாவும் உயர் மயிலே' என்று பாடுதலால் பெறப்படுகிறது. எனவே இது சாந்தோம் கெதட்ரல் கோயில் இருக்கும் இடத்தில் இருந்தது. கி. பி. 18ஆம் நூற்ருண்டில் போர்த்துகீசியர் இக் கோயிலே இடித்து இடித்த இடத்தில் கோட்டை கட்டினர். இக்கோயிலின் கற்கள் இப்போதும் கிறித் தவர்களின் பாதிரிமார் வாழ் இடங்களில் இருப்பு தைக் காணலாம். இவ்வுண்மைகளைக் கீழ்வரும் செய்திகளைக் கொண்டு தெளியலாம்.

மயிலையில் பல கல்வெட்டுகள் இருந்திருக் கின்றன. அவை முற்ற முடிய கிடைத்தில. சிற்சில கல் வெட்டுகள், சாந்தோம் மாதா கோவில் அருகே ஒரு சிறு சிறு கல்வெட்டுத் துண்டுகளாகக் கானப் பட்டன. அவை வட எழுத்தால் இயன்றவை. அவற்றின்மூலம், 'மயிலாப்பூர் சிவன்பார்வதி ஆகிய இவர்களின் கருவறை" (மூலட்டானம்) என்பதும், 'கூத்தாடுவார் (நடராசப்பெருமான்) திருஉரு முன்பு, ஒரு விளக்கு எரிய நிலம் வரியின்றிக் கொடுக்க', ப்ட்டதும்' என்பதும் அறியவருகின்றன. இப்ப்டியே பிஷப் வீட்டு முன் தாழ்வாரத்தில் உள்ள் கல்லு,