பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மயிலாப்பூர் 2を学

கலிவிழா கண்டவன்’ என்றும் கூறப்பட்டுள்ள ளனர். மயிலை கடலோரத்தில் இருப்பதனுல் இங்குச் செம்படவர் வாழ்வது பொருத்தம் ஆயிற்று. ஆகவே, அவர்களுடைய சேரி கூர்தரு வேல் வல்லார் கொற் றங்கொள் சேரி” என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. சம்பந்தர் காலத்தில் மயிலே ஒரு துறைமுகப் பட்டின மாக இருந்தது. இந்த உண்மை, - :அருநி தித்திறம் பெருக்குதற் கருங்கலம் பலவும்

பொருக டல்செலப் போக்கி அப் பொருட்குவை நிரப்ப வரும ரக்கலம் மனப்படப் பனேக்கரை நிரைக்கும் இருநி திப்பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளர்த்தார்: எனச் சேக்கிழார் சிவநேசரைப் பற்றிக் கூறுவத லுைம், வாயிலார் நாயனர் புராணத்துள் இந்நகரில் அயல் நாடுகளிலிருந்து யானைக் கன்றுகள் கப்பல் களில் கொண்டுவரப்படுகின்றன என்று அறிவிப் பதலுைம் தெரிய வருகிறது. -

திருஞான சம்பந்தர் முதல் பாட்டில் இறந்த பெண்ணின் சாம்பலே நோக்கி, பூம்பாவாய் நீ அடியார்கட்கு அமுது படைக்கும் விழாவாகிய மகேசுவரர் பூசையைக் காணுதே செல்வாயோ? செல் லாது வருக' என்று அழைத்தனர் "இதனை உருத்திர கணத்தார்க்கு அட்டிட்டல் காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரியில் காண்க. உருத்திர கணத்தார் இறைவரின் அடியவர்கள். போதியோ என்பதன் குறிப்புப் போகக் கூடாது என்பது. இம் முதற் பாட்டுப் புரட்டாசி மாதம் மகேசுவர பூசை திருமயிலையில் விசேட மாகக் கொண்டாடப் பட்ட தைக் குறிப்பதாகும். இப்பாடலில் ஆடி ஆவணி

வல்லார் - வல்லவர்களான செம்படவர்கள். தொற்றம். மீன் பிடிப்பதில் அடையும் வெற்றி, கலிவிழா - திருவரு எழுச்சியை விகளவிக்கும் திருக்கோயில் விழாக்கள். நிதி - செல்வம். கலம் - கப்பல், குவை - குவியல், -

  • 7