பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் $ 7

கில் உள்ள பாண்டவர் நாதர் கோவிலையும், (திருப் பாடகம்) உலகளந்த பெருமாள் கோயிலையும் (திருவூரகம்) இத்தலத்துக்குள் இருக்கும் நீரகம், கரகம், கார்வசனம் ஆகிய மூன்று சந்நிதிகளேயும், தேரடிக்கு அருகில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி) சந்நிதியாகிய திருவெஃகாவையும், காமாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் திருக்கள்வனுர் எனும் திருக்கோவிலையும், காமாட்சி அம்மன் கோவிலுக்கு வடகிழக்குத் திசையில் ஒருகல் தொலைவில் உள்ள திருப்பவள வண்ணம் என்னும் கோவிலையும், காஞ்சிபுரம் இரயில் நிலையத்திற்கு இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ள வைகுந்தப் பெருமாள் சந்நிதியையும் (பரமேசுவர விண்ணகரம்) கண்டு வணங்கலாம். இவை அனைத் தும் வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட பெரு மைக்கு உரியவை.

கச்சி ஏகம்பன் தலத்தைப்பற்றி அறியவரும் கல்வெட்டுச் செய்திகள்

இத்தலத்துக் கல்வெட்டுகளால் நாம் அறிவன : சமரலோகன் என்பவன் ஏகாம்பரநாதருக்கும் காமாட்சி அம்மையாருக்கும் பாண்டிய நாட்டில் உள்ள இரண்டு கிராமங்களே அளித்துள்ளனன். சாமாந்தக போஜன் என்பவன் ஒரு கிராமத்தையும் தானம் செய்துள்ளான். ஏசாம்பரநாதர் கோயில் கீழ்க் கோபுரத்திற்கு அருகில் ஆலால சுந்தரன் மடம் ஒன்று இருந்தது. திருநாவலூர்க் கூடலுடை யான் இதற்குத் தழுவக் குழைந்தான் நிலம் என்னும் பெயரில் நிலம் அளித்துள்ளான். ஈசான தேவி, மடமும் இருந்தது. புதுப்பாக்கம், வேளேயூர் திரு வேகம்பம் உடைய நாயகுர்க்கும், காமாட்சி அம்மை யார்க்கும் முறையே தேவதானமாகக் கொடுக்கப்

2