பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

பல்லாடு தலைசடைமேல் உடையான் தன்னைப்

பாய்புலித்தோல் உடையானேப் பகவன் தன்னைச் சொல்லோடு பொருள் அனைத்தும் ஆளுன் தன்னச்

சுடருருவில் என்பருக் கோலத் தானே அல்லாத காலனமுன் அடர்த்தான் தன் அன ஆலின் கீழ் இருந்தானை அமுதா னுனைக் கல்லாடை புனைந்தருளும் காபா லியைக்

கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் நானே' என்பது. இதில் இத்தலத்து இறைவர் இறைவி யாரை ஒருங்கே கண்டு மகிழ்ந்த குறிப்பை காபாலி யைக் கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் நானே? என்னும் வரி உணர்த்தி நிற்கிறது.

சுந்தரர் இத்தலத்து இறைவரைப் பாடிய பாடல் கிடைத்திலது. ஆல்ை, இவர் இத்தலத்தின் பழமை யினத் துறைக்கொண்ட செம்பவள இருள் அகற். றும் சோதித் தொன்மயிலே' என்று வாயிலார் நாயனு: ரைப் பற்றிக் கூற வந்த இடத்தில் தம் திருத்தொண் டத் தொகையில் குறிப்பிட்டுள்ளனர்.

"மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலேக் கைப்பூசும் நீற்ருன் கபாலீச் சரம் அமர்ந்தான் நெய்ப்பூகம் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணுதே போதியோ பூம்பாவாய்'

-இரண்டாம் திருமுறை.

பகவன் உமா தேவிக்குத் தன் உடலைப் பகுத்துக் கொடுத்த சிவபெருமான், என்பு - எலும் பு, அரு நீங்காத, கோலத்தானே அழகுடையவனே, அடர்த்தான் அழித் தவன். ஆல் - கல்லால மரம். அல்லாத காலன் . முறை. தெரியாத இயமன். கல்லாடைகாவி உடை, மடநல்லார். இளைய பெண்கள். மா.சிறந்த புழுக்கல்-சோறு (பொங்கல்). நேரிழை யார் - நேர்மையான ஆபரணம் அணிந்த பெண்கள்,