பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இறைவரது இயல்பு இன்னது என இயம்புகையில்,

'உள்ளம் உள்கலந் தேத்தவல் லார்க்கலால் கள்ளம் உள்ளவ. ருக்கருள் வான்அலன் வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே'

தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே"

'குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர் சுணங்கு பூண்முலேத் துன்மொழி யார்.அவர் வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே"

  • ஆதி யும் அர ய்ைஅயன் மாலுமாய்ப் பாதி பெண் உரு வாய பரமன்னன் ருேதி உள்குழைந் தேத்தவல் லார் அவர் வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே"

'ஆர்வம் ஆக அழைத்தவன் ஏத்தலும் வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே' என்று இயம்பி யுள்ளனர்.

திருவான்மியூர் வண்டுசேர் பொழில் வான் மியூர்' என்று புகழப்பட்டுள்ளது.

நெஞ்சில் ஐவர் தினக்க நினைக்குருச் பஞ்சின் மெல்லடி யாள் உமை பங்களன் றஞ்சி நாள்மலர் தூவி அழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே’’

--திருக்குறுந்தொகை

ஏத்த போற்ற, உக்கவர் - கரீவம் நீங்கி குழைந்து மனம் உருகியவர். சுணங்கு அழகுதேமல். தூய நல்ல. குழைந்து - உருகி. வாரம் - அன்பு, ஐவர் - மெய், வாய், கண், மூக்கு, செவிகள் நாள்மலர் . புதிய மலர்.