பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. திருக்கச்சூர் ஆலக் கோயில் 283

  • முதுவாய் ஒரி கதற முதுகாட்

டெரிகொண் டாடல் முயல்வானே

மதுவார் கொன்றைப் புதுவி சூடும்

மலையான் மகள்தன் மணவாளா

கதுவாய்த் தலேயில் பலி நீ கொள்ளக்

கண்டால் அடியார் கவலாரே

அதுவே யாமா றிதுவோ கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே’’

'பிறவாய் இறவாய் பேணுய் மூவாய் பெற்றம் ஏறிப் பேய்சூழ்தல் துறவாய் மறவாய் சுடுகா டென்றும்

இடமாக் கொண்டு நடமாடி ஒறுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக்

கண்டால் அடியார் உருகாரே அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே’’

-ஏழாம் திருமுறை.

ஒரி - நரி, முதுகாடு - சுடுகாடு. எரி - தீ. மது - தேன். வார். ஒழுகும். வீ.மலர். மலேயான் மகள்-பார்வதி, பேணுய் - எதையும் போற்ருய், மூவாய் கிழப்பருவம் அடையமாட்டாய், பெற்றம் எருது. துறவாய் - நீக்கமாட்டாய் ஒறுவாய் - மூளியான வாய். அறவே முற்றிலும்.