பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

27. திருஇடைச்சுரம்

இது மலைகளுக்கு இடையே கல்சுரத்தில் அமைந் திருத்தலின், இப்பெயர் பெற்றது. கல்லால விருட் சத்தின் கீழ் இருந்து உபதேசம் புரிந்த தட்சணு மூர்த்திகளிடம் உபதேசம் பெற்ற சனத்குமார முனிவர் பூசித்த தலம். அவரேயன்றிக் கெளதம முனிவரும் பூசித்துள்ளனர். இங்குள்ள மூலலிங்கம் மரகத லிங்கம். இது தன் முன்னுள்ள யாவற்றையும் தன் வடிவில் காட்டி ஒளிவிடக்கூடிய அற்புத உருவம். இவ்வாருன அற்புத வடிவுடன் திகழ்வதை உணர்ந்தே திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் ஒவ் வொரு பாட்டின் இறுதியிலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே' என்று வியந்து பாடிப் பரவி யுள்ளனர். இங்குள இலிங்கத்திற்குப் பின்புறம் கற்பூரஒளியைக் காட்டினுல் நன்ருகத் தெரியக்கூடிய பளபளப்புடைய திருவுருவமாகும். இங்குள்ள மலை நந்திமலை எனப்படும்.

இங்குள்ள இறைவர் இடைச்சுரநாதர், ஞான புரீஸ்வரர் எனப்படுவார். இறைவியார் இமயமடக் త్ర - ஆவார். இங்குள்ள தீர்த்தம் மதுர தீர்த்தம், இந்திர தீர்த்தம் என்பன.

இத் தலத்துக் கல்வெட்டின் மூலம், இறைவர் திருவிடைச்சுரமுடைய நாயனுர், திருவிடைச்சுர முடையார் என்று குறிக்கப் பெற்றுள்ளனர். இங்குச் ಕ್ಲೀನ್ತಿಖ್ವf (ఉమయ్ల இருப்பதை அறிவிக்கிறது. கோவர்த்தன அம்பாள், திருக்காமக் கோட்ட முடைய பெரிய நாச்சியார் உருவம் அமைத்துக் கருப்பக் கிருகத்திற்கு விளக்குப் போடவும், ஆவன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் அளிக்கப்பட்டன வாகவும் அறியவருகிறது.