பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்

செழும்புனல் அனேயன செங்குலை வாழை ஏர்கொண்ட பல வினுெ டெழில் திகழ் சாரல்,

இடைச்சுரம்"

  • கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி

குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல், இடைச்சுரம்

பொழில்மல்கு நீடிய அரவமும் மரவம்

மன்னிய கவட்டிடைப் புணர்குயில் ஆலும் எழில்மல்கு சோலையில் வண்டிசைபாடும், இடைச்சுரம்’

'சாந்தமும் அகிலொடும் முகில்பொதிந் தலம்பித் தவழ்கண மணியொடு மிகுபளிங் கிடறி ஏந்துவெள் அருவிகள் எழில் திகழ் சாரல், இடைச்சுரம்’ மேலஇலங் கருவிகள் மணமுழ வதிர

மழை தவழ் இளமஞ்சை மல்கிய சாரல் இலஇல வங்கமும் ஏலமும் கமழும், இடைச்சுரம்"

'கருமைகொள் வடிவொடு சுனேவளர் குவளைக் கயல் இனம் வயலின் வாளைகள் இரிய எருமைகள் படிதிர இள அனம் ஆலும், இடைச்சுரம்'

என்னும் வரிகள் மூலம் அறியலாம்.

பண், இசை, செழும்புனல் வளமான நீர், ஏர்-அழகு. பலவு-பலாப்பழம். கோடல்-செங்காந்தள் பூ ஒழுகல்-தேணேச் சொரியும், தும் பி , வண்டுகள். குரவம், மரவம் என்பன மலர்களின் வகைகள். கடி - வாசனை, மல்கு - மிக்க கவட்டிடை - கிளே யில், அரவம்-ஒசை, ஆலும்.ஒலிக்கும். சாந்தம் - சந்தனம். அகில் - அகில்கட்டை, முகில் - மேகம். பொதிந்து - மூடி, கனம் - கூட்டமான இலங்கு- விளங்கும். முழவு - மத்தளம். அதிர - ஒலிக்க அணிவர் - தெருக்க மானவர். இரிய விலக, அனம் - அன்னம்.