பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வரைக் கண்டு உருகியதாக ஈற்றுப் பாடல் அறிவிக். கிறது. இக்கருத்துகளே "மடைச்சுரம் மறிவன வாளே யும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழி' என்றும், 'பிறையுடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தர்” என்றும் வரும் வரிகளில் காண்க. -

இப் பதிகத்தில் சமண பெளத்தர்களைப் பற்றிய குறிப்பு இல்லை.

'பல இலம் இடுபலி கையில் ஒன் றேற்பர் பல புகழ் அல்லது பழிஇலர் தாமும்

தலைஇலங் கவிச்ஒளி நெடுமுடி அரக்கன்

தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையன்

மலைஇல்ங் கருவிகள் மனமுழ வதிர

மழை தவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்

இலஇல வங்கமும் ஏலமும் கமழும்

இடைச்சுரம் மேவிய இவர்வணம் என்னே'

-முதல் திருமுறை.

திருஇடைச்சுரத்தை வணங்கிவிட்டு அங்கி ருந்து திருப்போரூருக்குச் சென்ருல், முருகப்பெருமா னையும் கண்டு வணங்கலாம். இத் தலத்து முருகப் பெருமானப் பற்றி அருணகிரிநாதர் பாடிய திருப்: புகழ் நான்கு. அவற்றுள் ஒன்று,

மடைச்சுரம் - நீர் மடைகளின் வழி. மறிவன - மடங்கித். துள்ளுவன: மருவிய - கலந்த புனல் நீர், கசழி - சீர்காழி, சரிதை - ஒழுக்கம், பரவி . போற்றி இலம் - வீடு. அவிர் . விளங்கும், அரக்கன் இராவணன். தடம் . பெரியது. மஞ்ஞை - மயில், மல்கிய மிக்க