பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் 29

அட்டவசுக்கள், பசு, இந்திரன், வராகன் வேதங் கள், விஷ்ணு, பிரம்மா, முருகன், சந்திரன், கோடி ருத்திரர் ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கோடி ருத்திரர் பூசித்துப் பேறு பெற்றதற்குச் சான்று, இத் தலத்துச் சங்கு தீர்த்தக் கரைக்குக் தென்கிழக்கில் அரை பர்லாங் தூரத்தில் உள்ள ருத்திரகோடீஸ்வரர் கோவிலே என்பதை அறிக. இத் தலத்து விநாயகர், வண்டுவன விநாயகர். இறைவர், ருத்திர கோடீஸ்வரர். தேவியார். அபிராமி அம்மை யார். இக்கோவிலைக் கண்ட அளவில், இது பழை மையானது என்பது நன்கு புலகுைம். ஆனல் கோவில் கவனிப்பார் அற்றுப் பாழ் அடைந்து இருக் கிறது. உள் சுற்று வரவு செடி, கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது. ஒருவேளே பூசைதான் நடக்கிறது. இக் கோவிலே ருத்ரன் கோவில் என்பர். இது வைப்புத் தலங்களில் ஒன்று. X

திருக்கழுக்குன்றமலேமேல் இருக்கும் வேத கிரீஸ்வரர்மீது பன்னிரண்டு ஆண்டுக் கொருமுறை இயற்கை இடி விழும். இலிங்கத்தின் மீது விழுந்தும் இலிங்கத்திற்கு எந்த விதமான இடையூறும் செய் யாது. இதனே இடி முழுக்கு என்பர். அதாவது இந்திரன் பூசை செய்வதாக ஐதீகம். - மலே, வேத வடிவமானது. மலே இருக்கு, யசுர், சாம, அதர்வணம் போல நான்கு குன்றுகள் இணைந்திருப்பதே இதற்குச் சான்று. இதனுல்தான் தேவார ஆசிரியர் மலைமீது ஏருமலே மலைமீதுள்ள இறைவரை மனத்தால் எண்ணிக் கீழ் இருந்தே பாடிச் சென்றனர். அவர்கள் நின்று பாடிய இடம் இது போது மூவர்பேட்டை என்று வழங்கப்படுகிறது. இங்கு மூவர் உருவங்கள் அமைந்த கோவில் உண்டு. மாணிக்க வாசகரும் இங்கிருந்தே இறைவரைக் குருவடிவாகக் கண்டு பாடல் பாடியுள்ளனர். இம் மூவர்பேட்டை நாம் மலேயை வலமாகச் சுற்றி வரும்