பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தொண்டைநாட்டுப் பாடல பெற்ற சிவதலங்கள்

29. திருஅச்சிறுபாக்கம்

இத் தலத்துக்குரிய பெயர்க் காரணங்களாக இரண்டு வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று இறைவர் முப்புரம் எரித்தபோது பூமியாகிய தேரின் அச்சு இற்ற (முறிந்த) காரணத்தால், இத்தலம் அச்சிறுபாக்கம் எனப் பெயர் பெற்றது என்பது. மற்ருெரு காரணம், பாண்டிய நாட்டு அரசன் தன் நாட்டில் திருக்கோயில் அமைக்கக் கங்கை மணலை ஏற்றிக்கொண்டு வர, வண்டி இத்தலத் அருகே வந்தபோது புே நின்றுவிட,

அச்சு முறிந்ததல்ை இப்பெயர் பெற்றது என்பது. (இதுபோது அச்சரபாக்கம் எனப் படுகிறது) அதன்பின் அம்மன்னன் காதில் அசரீரி வாயிலாக இறைவர் திருவருளே அச்சு முறிந்த மைக்குக் காரணம் என்று உணர்ந்து இக் கோயில் திருப்பணி செய்துள்ளனன். இங்குள்ள அச்சுமுறிந்த இடம் வண்டிக்குப்பம் என்று கூறப்படுகிறது. இத் தலத்தில் இரண்டு மூலட்டானங்கள் உள்ளன. கண்ணுவர், கெளதமர் ஆகிய இருவரும் பூசித்த தல்ை இரு மூலட்டானங்கள் இங்கு ஏற்பட்டன. இறைவர் இரண்டு மூலட்டானங்களில் விளங்கு வதைத் திருஞானசம்பந்தர் தம் பதிகத்தின் முதல் பாட்டில் அன்று இரண்டு உருவமாய் எம் அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே' என்று கூறி இருப்பதைக் கொண்டுணரலாம். கோவில் கிழக்கு நோக்கி யுள்ளது. கோயிலுக்கு வெளியே தேவ தீர்த்தம் இருக்கிறது. கோயிலுக்குள் சிங்க தீர்த்தம் உளது. மேலும் சங்கு தீர்த்தம் என்னும் ஒரு தீர்த்த மும் உண்டு. இத்தலம் பாக்கபுரி, பாக்கபுரம் என்றும் கூறப்பெறும். கோவிலுக்குள் இருக்கும் இரண்டு ஆவுடையார்கள், முறையே எமையாட்சீசர், உமை