பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. திரு அச்சிறுபாக்கம் 3 O 7

யூாட்சிசர் என்று பெயர் பெறுவர். உமையாட்சீசர் கோவில் கோபுரத்திற்கு நேரே இருக்கிருர். இறைவர் சுயம்புமூர்த்தி. (தான் தோன்றித் தம்பிரான்) இறை வர் பாக்கபுரி ஈஸ்வரர் என்றும், இறைவியார் சுந்தர நாயகி என்றும், அதிசுந்தரமின் அம்மை, பால் குசாம்பாள் என்றும், கூறப்பெறுவர். இங்குத் தல் விருட்சம் கொன்றை. இங்கிருக்கும் ஆட்சீஸ்வ்ரர் கோயிலின் மண்டபத்தின் வடக்குச் சுவ்ரில் முதல் குலோத்துங்கன் உருவம் உளது. இதனுல் இக் கோயில் அவனுல் கட்டப்பட்ட்து. என ஒருவாறு ஊகிக்கலாம். இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் இறைவர் ஆட்சிகொண்ட நாயினர், ஆட்சீஸ்வரர் என்னும் பெயரையுடையார் என அறிகிருேம். இதனைத் திருஞானசம்பந்தர் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே' என்று கூறுவதிலிருந்தும் உணரல்ாம்.

இவ்வூரின் மலை உச்சியில் ஒரு சிவாலயம் உண்டு. ஆட்சீஸ்வரர் வருடந்தோறும் அகத்திய ருக்கும், திருஞானசம்பந்தருக்கும் காட்சி தருகிரு.ர். இவ்வூர் மலையின் தென்கோடிக்குப் பெரும்பேர் என்பது பெயர். இங்குத் தான்தோன்றீஸ்வரர், கைலாசநாதர் கோயில்களும் உள்ளன. பெருவிழா சித்திரையில் நடக்கும். ஐந்தாம் நாள் திருக்கல்யாண விழாவும், இரஷப வாகன விழாவும், ஏழாம் நாள் கொன்றையடி விழாவும் சிறப்புடன் நடைபெறும். பதி னேராம்நாள் பெரும்பேருக்கு இறைவர் சென்று அகத் தியர்க்குக் காட்சி தருவர். வைகாசியில் திருஞான சம்பந்தர் விழா நடக்கும். ஆவுடையாருக்கு முன் உள்ள கிணற்றில் சுரங்கம் இருப்பதாகக் கூறுகின்ற னர். அஃது, இதுபோது கல்லால் மூடப்பட்டுள்ளது. கல்வெட்டால் இத்தலத்து இறைவராம் அட்சீஸ் வரர், அச்சுக்கொண்டருளிய தேவர் என அறியப்படு