பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக் கச்சி ஏகம்பம் 2';"

ஆயும் நின்பொருள் நுண்பொருள் ஆதியே

ஆல நீழல் நுண்பொருள் ஆதியே காய வில் மதன் பட்டது கம்பமே

கண்ணு தல்பர மற்கிடம் கம்பமே '

-மூன்ரும் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் நான்காம் திருமுறையில் மூன்று உள்ளன. முதல் பதிகத்தில் அப்பர் பெருமானுர், கச்சிப் பெருமானைத் தம் மனத். துள் வைத்துப் போற்றியதை ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் குறித்துப் பாடியுள்ளனர். இதனை பெருமானே என் மனத்தே வைத்தேனே' என்னும் வரியில் காண்க.

இப் பதிகப் பண் காந்தாரம். இதனை ச் சங்கரா பரணத்தின் ஜன்யராகமான நவரோசு என ஒருவாறு கூறலாம். இப் பதிகப் பாடல்கள் கொச்சகக் கலிப்பா ஆகும். அதாவது ஒவ்வொரு பாட்டும் நான்கடி களைக் கொண்டு ஒவ்வோர் அடியும் பெரும்பாலும் மூவசைச்சீர்கள் நான்கைப் பெற்று வருவது. .

திருநாவுக்கரசர் இறைவரைப் பற்றிப் பாடும் போது

கரவாடும் வன்நெஞ்சர்க் கரியானேக் கரவார்பால் விரவாடும் பெருமான் வாஞேர்க்கும். ஏளுேர்க்கும் பெருமான்'

ஆலம் - கல்லால விருட்சம். ஆதி . முதல் பொருள். ஆதி-ஆகின்ருய். காய-போர் புரியவந்த, மதன்-மன்மதன். பட்டது-அடைந்தது. கம்பம்-நடுக்கம். கம்பம்.திருஏகம்பம். கண்ணுதல் நெற்றிக்கண். . . . . . . ;

கரவு - வஞ்சகம்’. கரவார்பால் - வஞ்சகம் இல்லாத வரிடம், விரவாடும் கலந்திருக்கும். வாளுேர் - தேவர். ஏனுேர் . மற்றையோர்,