பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

' கைப்போது மலர்தூவிக் காதலித்து வாளுேக்கள்

முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன் ' எப்போதும் இனியான்' 'தொண்டர்தாம் மலர்து விச் சொல்மால புனைகின்ற

இண்டைசேர் சடையான் ' ஆயிரம்பேர் அம்மான் ’’ தேசங்கள் தொழநின்ற திருமாலாம் பூசனைப் பூசனேகள் உகப்பான் ’’ ' வல்லார்கள் மனத்துறையும் மைந்தன் ’

துகள் ஏதும் இல்லான் ' என்றெல்லாம் புகழ்ந்து பாடியுள்ளார்.

இதில் திருமால் தேசங்கள் தொழ நின்ற திரு மால் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. ஈண்டுத் தேசங்கள் என்பன ஆழ்வார்கள் பாடியுள்ள திவ்ய தேசங்களே என்க. இத்தகைய பெருமைக்குரிய திருமாலும் நம் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ருர் என்று கூறிச் சிவபெருமானின் உயர்வை உணர்த் தியதை உணர்ந்து இன்புறுக.

இப்பதிகம் கச்சி ஏகம்பத்தில் பாடப்பட்டது என்பதற்குரிய குறிப்பு ஒன்பதாவது பாட்டில் வரும், "மதில் கச்சி ஏகம்பம் மேயானே? என்னும் வரியால் மட்டும் அறிய வருகிறது, ஏனேய பாடல்களில் கச்சிக் குறிப்பு இல்லை.

அப்பர் இறைவனே எங்ங்னம் தம் மனத்தில் வைத்தனர் என்பதை 'அப்போது மலர் துரவி ஐம்

கைப்போது கையாகிய மலரில், இண்டை-முடி மாலை, உகப்பான் . விரும்புபவன். வல்லார்கள் . தொழி வல்ல வர்கள், துகள் - குற்றம். உகப்பான் - விரும்புவான். அப்போது அந்த வேளையில் மலர்ந்த ஐம்புலன் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன.