பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 3荡

இறைவரிடம் தமக்குத் திருவருள் புரிந்து இரக்கம் காட்டவேண்டும் என்று வேண்டிய பாட்டு,

கருவுற்ற நாள்முதலாக உன் பதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ள மும் நானும் கிடந்தலந் தெய்த்தொழித் திருஒற்றி ஊராய் திருஆல வாயாய் திருஆரூராய் (தேன் ஒருபற்றி லாமையும் கண்டிரங் காய் கச்சி ஏகம்பனே,

என்பது. * : *

சொல் வேந்தர் தமது பதிகத்தின் ஈற்றுப் பாடலில் பெரும்பாலும் இராவணனது செயலேயும், அவனுக்கு இறைவன் செய்த மறக்கருணையை யேனும், அறக்கருணையினேயேனும் குறித்துப் பாடு வது வழக்கம். ஆல்ை இப்பதிகத்தில் இக்குறிப்பு கள் ஒன்றும் இல்லை,

அப்பர் இத்தலத்தைப்பற்றி ஐந்தாம் திருமுறை ஆயில் பாடியுள்ள திருக்குறுந்தொகைப் பதிகங்கள் இரண்டு. திருக்குறுந்தொகைப் பாடல்கள் அனைத் தும் கலி விருத்தத்தால் ஆனவை. கலி விருத்தம் என்பது நான்கடிகளைக் கொண்டு, ஒவ்வோர் அடியி லும் பெரிதும் ஈர் அசைச்சீர்கள் நான்கு பெற்று வருவது. திருக்குறுந்தொகைப் பாடல்களுக்குப் பண் குறிக்கப்படவில்லை. .

முதல் குறுந்தொகையில் முதல் பாடல் நெஞ் சிற்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்துள்ளது.

பண்டு செய்த பழ வினே யி ஆபயன் கண்டும் கண்டும் களித் திக சன் நெஞ்சமே வண்டு லாம்மலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்ட குய்த்திரி யாய்துயர் தீரவே என்னும் பாடலைக் காண்க.

அலந்து - திரிந்து. எய்த்து இளேத்து திருஆலவாய் - மதுரை. பன்டு - முன் பிறப்பில். வினை - பாவம். களித்தி . மகிழ்கின்ருய். இடுகு-குறுகிய, திறம் பக்கம். தீம்-இணிய, பொழில் - சோலே.