பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 , திருக்கச்சி ஏகம்பம் 39

'அருந்தி றல் அம ரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோ, டிருந்தவன்" பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு றும் அமு தாயவன்” . 'பொய் அ னத்தையும் விட்டவர் புந்தியுள், மெய்யன்’

சிந்தையுள் சிவ மாய்நின்ற செம்மையோ டந்தி ஆய் அனல் ஆய்ப்புனல் வானம்ஆய்ப் புந்தி யாய்ப்புகுத் துள்ளம் நிறைந்தளம், எந்தை" என்று பாடி அறிவித்துள்ளனர்.

நாம் மூப்பு, வெறுப்பு உணர்ச்சி முதலான நிலை களே அடையுமுன் காஞ்சியை அடைந்து ஈடேற வேண்டும் என்பதை, .

"மூப்பி ைேடு முனிவுறுத் தெந்தமை ஆர்ட்ப தன்முன் அணிஅம் நர்க்கிறை காப்ப தாய கடிபொழில் ஏகம்பம் - சேர்ப்ப தாகநாம் சென்றடைந் துய்துமே” என்று உபதேசம் செய்துள்ளனர்.

அப்பர் பெருமான் கச்சியம்பதியைப் பற்றிப் பாடிய தாண்டகப் பதிகங்கள் இரண்டுள. தாண்டகம் என்பது பற்றிப் பல வகைக் கருத்துகள் உண்டு. அவற்றின் விரிவு இங்கு வேண்டா. சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறவேண்டுமானுல், தாண்டகம்

அருந்திறல் - அரிய வன்மை. அமரர் - தேவர். அயன் - பிரமன், பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி, என்பன. புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, ந:ற்றம் என்பன. அறிப்புறும் அறிவுறும். புந்தி - அறிவு. முனிவு வெறுப்பு. ஆர்ப்பது - கட்டுவது. உறுந்து-வருத்தி. எந்தமை-எங்களே,