பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 4.

அழுவார்கட்கு அளிப்பான்' 'வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும், மண்ணகமும் மற்றும் ஆகிப் பரந்தவன்' என்று எடுத்து இயம்பியுள்ளனர்.

இப் பதிகத்தில் திருவையாறு, திருவிடை மருதுரர் தலங்கள் இணைத்துப் பாடப்பட்டுள்ளன. திருக்கச்சித் தலம் எழில் ஆரும் பொழில்கச்சி என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. - - .

அடுத்துள்ள திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ் வொரு பாடலும் கூட ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே' என்றே முடிவுற்று மிளிர்கிறது.

இறைவனது இயல்பைச், சிறப்பு முறையில் ஒங் காரத்து ஒருவன்', "உணர்மெய்ஞ்ஞானம் விரித்த வன்' 'வியன் உலகில் பல் உயிரை விதியினுலே தெரித்தவன், சிறந்தடியார் சிந்தை செய்யும் பேரவன்' 'பேராயிரங்கள் ஏத்தும் பெரியவன்' 'வாதை உறும் பிணியைத் தீர்க்கும் மருந்தவன்' 'சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்’ தானே ஆய இமையவன்' 'தொண்டுபடு தொண்டர் துயர் தீர்ப்பான்'

நேசன்காண் நேசர்க்கு நேசம் தன்யால்

இல்லாத நெஞ்சத்து நீச தம்மைக் கூசன் காண் கூசாதார் தெஞ்சு தஞ்சே

குடிகொண்ட குழகன்

என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்.

வான் - வலிமை, பிணி , நோய் எழில் - அழகு, ஆரும் - நிறைந்த பொழில் - சோலே. ஓங்காரம் . ஒம் எனும் பிரணவம், வியன் - பரந்த, குழகன் . அழகன். .சிவனேயும், விஷ்ணுவையும், சத்தியையும், கணபதியையும், முருகனேயும், சூரியனையும், தனித்தனி வழிபடும் முறையில் சமயம் ஆறு ஆயின,