பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

ஈண்டு அப்பர் ஏகாம்பரநாதரைக் கூற்று வனக் குமைத்த கோன் காண் என்று போற்றிப் புகழ்ந்து பாடுகிருர். இப்படி ஒவ்வொன்ருக இறை வனுடைய திருப்பெயர்களேச் சொல்லி ஒவ்வொரு மல்ரை இட்டு அர்ச்சனை நடத்தலாம் அன்ருே ? இவ்வாறு 'தாண்டக மூலமும், மாணிக்கவாசகர் பாடிய போற்றித் திருவகவல் மூலமும் அர்ச்சனை நடத்துக' என்று அர்ச்சகரைக் கேட்டால் அவர், தம்மை இம்முறையில் தயார் செய்துகொண்டு தமிழில் அர்ச்சனே செய்ய முன் வருவர். கேளாதது நம் தவறு. இனியாகிலும் நம் அன்பர்கள் கோயில் அர்ச்சகர்களைத் தமிழால் அர்ச்சனை நடத்தக் கேட் பார்களாக. அப்படி அவர்கள் நடத்த இணங்க வில்லை என்ருல், கோயில் மண்டபத்தில், குளக் கரையில், ஓர் ஊதுபத்தியைக் கொளுத்திக்கொண்டு, மலர்களைப் பறித்து வைத்துக்கொண்டு, இறைவனது ஒவ்வொரு திருப்பெயரைச் சொல்லி ஒவ்வொரு மலர் இட்டு அர்ச்சனை நடத்தவும். -

சுந்தரர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பதிகம் அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை நன்கு உணர்த்துவதாகும். அதாவது சுந்தரர், இழந்த கண்பார்வையைப் பெற்ற குறிப்பை அறிவிப்பதாகும். இதனை இப்பதிகப் பாடல்களின் ஈறுதோறும் 'கம்பன் எம்மானே க் காணக் கண் அடியேன் பெற்றவாறே' என்று கூறி இருப்பது கொண்டு உணரலாம். இத் தலத்து இறைவியின் பெயர் ஏலவார் குழலி என்பதை 'ஏலவார் குழலாள் உமை நங்கை' என்று இப் பதி கத்தில் வரும் வரியால் அறியலாம். மேலும், இப் பதிகம் இறைவி இப்பெயருடன் ஏகம்பனை வழிபட்ட தையும் அழகுடன் 'உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பட்ட காலகாலன் கம்பன் எம்மான்'

ஏலம் - மயிர்ச்சாந்து. வார் . நீண்ட குழல் கூந்தல். ஆரத்தி - போற்றி. காலகாலன் . இயமனுக்கும் இயமன்.