பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. திருவோண காந்தன்தளி 59



கலை அ மைத்த காமச் செற்றக்
குரோத லோபம் மதவர் ஊடை
உலை அ மைத்திங் கொன்ற மாட்டேன்
ஒண காந்தன் தளிஉ ளிரே ’,

என்று பாடி அறிவித்துள்ளார்.

இப்பதிகத்தில் இறைவர் திருநாவலூரரது திரும ணத்தில் ஆவணம் காட்டி (அடிமை ஒலை) அடிமை கொண்ட குறிப்புக் குறிக்கப்பட்டுள்ள்து. அதனை "ஆவணம் செய்து ஆளும் கொண்ட வரை துகில் லொடு பட்டு வீக்கிக் கோவணம் மேல் கொண்ட வேடம்' என்று ஈற்றுப் பாடலில் வருவது கொண்டு. தெளிக.

அடியவர்கள் பண்பைப் பகரும்போது சுந்தரர்,

பெற்ற போதும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்ருேர் பற்றிலர் ”.

என்று குறிப்பிடுகின்றார்.

இறைவனும் இறைவியும் இன்புற்றிருக்கும் நிலையினை,

வார் இ ருங்குழல் வாள் நெ டுங்கண்
மலைம கள் மது விம்மு கொன்றைத்
தார்இ கும்தடமார்பு நீங்காத் தையலாள்

என்று பாடி மகிழ்கின்ருர்,

காஞ்சியம்பதி கார் இரும்பொழில் கச்சிமூதுார்' என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மேகம் ____________________________________________________

கலை - நூல். செற்றம் - வெறுப்பு. குரோதம் - பகைமை, லோபம்-கஞ்சபுத்தி, மதவர் - மதம், ஐ. ஐம்பொறிகள், உலை - உலைக்களம் அமைத்து. ஊடு + ஐ எனப் பிரிக்க. ஊடு - சேர்ந்து.