பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருக்கச்சி அனேகதங்காவதம் 8較

இத் தலத்தைக் குபேரனும், முருகப் பெருமா னும் பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள இறைவர் அனேகதங்காவதேஸ்வரர் ஆவார். ஆனல் கல்வெட்டின் மூலம் அணையதங்க உடைய நாயனுர் என்று அறிகிருேம். இறைவியின் பெயர் காமாட்சி அம்மை. முதல் குலோத்துங்கன் இத்தலத்திற்கு. இரண்டு வேலி நிலம் கொடுத்துள்ளான். இந்நிலம் கைலாசநாதர் கோவிலுக்கு வடக்கே உளது. இக் கோயில் அதிகாரிகள். கோயிலுக்குரிய கைக்கோளர் கட்கு 1400 குழி நிலம் கொடுத்ததும் கல்வெட்டினுல் அறிய வருகின்றது. தீர்த்தம் தானு தீர்த்தம்.

மேலும் கல்வெட்டினுல் அறியப்படும் செய்தி கள் : முதல் குலோத்துங்கன் திருக்கோயிலுக்கு மேலும் மூன்று வேலி நிலங்கள் இத்தலத்திற்குக் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. அந்நிலம் தாமர்க் கோட்டத்துத் தாமர் நாட்டுத் தாமரில் உள் ளது. கைலாசநாதர் கோயில் சர்வதீர்த்தக் குளத் துக்கு அருகில் இருக்கிறது. இக் கோவிலில் உள்ள நில அறையைச் சுற்றி வருவது ஒரு விசேடம் ஆகும். பாவமும் நீங்கும் என்பர். கைலாசநாதர் கோயில் ராஜசிம்மேஸ்வரம் என்றும் பெயர் பெறும், இத்தலத்திற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றே. உளது. இப்பதிகம் எழுசீர் விருத்தத்தால் ஆனது. ஒவ்வோர் அடியிலும் ஏழு சீர்கள் இருப்பதைக் காண்க. இப்பதிகப் பண் இந்தளம். இப்பண் இக் காலத்தில் நாதநாமக்கிரியையிலும், இலளித பஞ்சமி யிலும் பாடப்பட்டு வருகிறது.

இப் பதிகத்தின்மூலம் நாம் அறிவன : இப்பதி கத்தின் மூன்ரும் பாடலில் இத்தலத்தின் மாண்பு 'மலர்க்கொடிகளில் குயில் கூவும் இடம், மயில்கள் ஆடும் இடம், துன்பம் கொண்ட வினையைத் தீர்க்கும் இடம், அழகிற்கும் செல்வத்திற்கும் இருப்பிடம்"