பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

5. திருக்கச்சிநெறிக்காரைக்காடு

இத்தலம் காஞ்சிபுரம் ஆட்ஸன்பேட்டைக் கடைத் தெருவின் வடகிழக்கில் உள்ள வேப்பங் குளத்திற்கு வடக்கே உள்ளது. இக்கோவில் சித்திர புரம் என்றும் கூறப்பெறும், இதுபோது இக்கோவில் திருக்காலிச்சுரம் அல்லது திருக்காலீசுரர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இவ்விடம் முன்பு காரை என்னும் மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையின், கச்சிநெறிக் காரைக்காடு என்னும் பெயரைப் பெற்றது. இந்திரனும் புதனும் இங்குப் பூசித்துப் பேறு பெற்றனர்.

இங்குள்ள இறைவர் சத்திய வாத நாதேசுவரர், காரைத்திருநாதர் என்றும், தேவியார் காமாட்சி அம்மையர் என்றும் அழைக்கப் பெறுவர். கல்வெட் டின் மூலம் இறைவர் திருக்காரைக் காடுடையார் எனப்படுவார். தேவியார் காரைக்குடி அம்மை எனப் படுவார். இங்குள்ள தீர்த்தங்கள் இந்திர தீர்த்தம், காரை தீர்த்தம், சத்திய தீர்த்தம் என்பன. இத்தலத் திற்குத் தெற்கே உள்ள வேப்பங்குளம் பெயரளவில் வேப்பங் குளமே யானுலும், நல்ல நீரையுடையது.

காஞ்சிப் புராணத்தில் இத்தலம் சத்திய விரதம் எனப்படும். இறைவர் சத்திய சத்தியர், சத்திய சோதகர், சத்திய சங்கற்பர், சத்திய காமர் எனப். படுவர். இங்குள்ள சத்திய தீர்த்தத்தில் மூழ்கியவர் கள் முத்தி அடைவர்; வேண்டியதைப் பெறுவர். இந்திரபுரம் என்றும் இத்தலத்தைக் கூறுவர். இங் குள்ள தீர்த்தத்தில் புதன்கிழமைதோறும் மூழ்கின், பெரும் பயன் உண்டு. இத்தலத்தின் மாண்மை அப்புராணம்,