பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருக்கச்சி நெறிக்காரைக்காடு 密等

அற்றை நாள் முதல் அச் சூழல் இந்திர புரமாம் அங்கண் கற்றைவார் சடையீர் ஓர் கால் கண்ணுறப் பெற்ருே தாமும் வெற்றிவேல் காலன் தன் பால் விரவிடார் கருவில் எய்தார் இற்றிதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார் ’’

என்று கூறுகிறது.

இத் தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இப்பதிகம் கொச்சகக் கலிப் பாவால் அமைந்தது. காய்ச் சீர்களாம் மூவகைச் சீர்களே ஒவ்வோர் அடியும் பெற்று, நான்கு அடி களில் முடிவது கொச்சகக் கலி எனப்படும் இப் பதிகப் பண் பஞ்சமம். இக்காலத்தில் ஆகிரி இரா கத்தோடு இதனை ஒருவாறு ஒப்பிடலாம்.

இத்தலத்து இறைவரைத் தேவர்கள் மலர் இட்டு வழி படுவர் என்பதை 'பல்மலர்கள் கொண் டடிக் கீழ் வானேர்கள் பணிந்து இறைஞ்சி' என்னும் வரியால் உணரலாம்.

இப்பதிகத்தில் கூறும் உபதேசம், சமண பெளத்தர்கள் கூறுவன மெய்யல்ல ; அவர்கள் உரை வழி நிற்கவேண்டா என்பது, குண்டாடிச் சமண் படுவார் கூறைதனே மெய்போர்த்து மிண் டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல' என்ற அடியினைக் காண்க.

காஞ்சியம்பதியும் திருக்கச்சி நெறிக் காரைக் காடும் கீழ் வருமாறு சிறப்பிக்கப்பட்டுள்ளன.

அற்றை-அந்த, சூழல்-இடம், அங்கண் . அந்த இடம், காலன் . இயமன், தன் பால் - தன்னிடம், வி ரவிடா - சேராச், கருவில் தாயின் கர்ப்பத்தில், எய்தார் . அடையார். இற்று. இத்தகையது, கூறை , ஆடை, மெய் - உடம்பு, மிண்டாடி. வலிய உரைகளைப் பேசி,

5