பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

தேவர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். இத்தலத்துப் பூசைக்காகக் கிருஷ்ணதேவ மகாராயர், ராஷ்டிர கூடக்கன்னரத்தேவர் கிராமத்தையும், நிலத்தையும் அளித்திருக்கின்ருர்கள் என்பதும் கல்வெட்டுகளால் அறிய வருகின்றன. .

இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இப்பதிகம் கலிவிருத்தத் தால் ஆயது. பெரிதும் ஒர் அடிக்கு ஈர் அசைச் சீர்கள் நான்கைப்பெற்று நான்கடிகளில் முடிவதே கலி விருத்தம் ஆகும். இப் பதிகப் பண் தக்க ராகம், இதனை ஒருவாறு காம்போதி போன்றது என்னலாம், இத் தலத்தின் இயற்கை அழகை, .

கழுநீர் குவளேம் மலரக் கயல் பாயும் கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணில் முட்டம்'

குடைஆர் புனல் மல் குகுரங் கணில்முட்டம் " கோலம் பொழில் சூழ்த் தகுரங் கணில்முட்டம் ” கலவம் மயில்கா முறுபே டையொ டாடிக் குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணில் ஆட்டம் ” என்று சிறப்பிக்கும் ஆற்ருல் உணரலாம்.

ஆளுடைய பிள்ளையார் இத்தலத்து இறைவரை நினைந்து பற்று அறுத்ததை,

குரங்கணில் முட்டம், நிலவும் பெருமான் அடிநித் தம்நினந்தே பலவும் பயன் உள் ளன.பற்றும் ஒழிந்தோம் ” என்று உணர்த்தியுள்ளனர்.

கழுநீர் - ஆம்பல் மலர். குடை - குளித்தற்குரிய நீர், ஆர் - பொருந்திய, புனல் - நீர், மல்கு-பெருகிய. கோலம் . அழகு, பொழில் சோலே, கல்வம் - தோகை, காமுறு . விரும்பும்.