பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருமாகறல் 7 :

இத்தலத்தில் வாழ்ந்த கார்த்திகேய முதலியார் என்பவர் நல்ல தமிழ் அறிவும், மொழி, நூல் புலமையும் உடையவர். அவர் தமிழில் மொழி நூல் என்னும் பெயரில் ஒரு நூல் எழுதி யுள்ளனர். இதுவே முதல் முதல் தமிழில் எழுந்த மொழி நூல். இத்தலத்து இறைவர் அடைக்கலம் காத்த நாதர், அகத்தீசர், மங்கல மகரந்த ஈஸ்வரர் என்றும், இறைவியார் புவன நாயகி என்றும் குறிக்கப் பெறு வர்கள். விநாயகப் பெருமான் பெயர் பொய்யாப் பிள்ளையார் என்பது. இத்தலத்திலுள்ள அக்கினி தீர்த்தத்தில் மூழ்கினல் யமலோக பயம் ஏற்படாது. சிவ லோகத்தில் இன்பமாக வாழலாம்.

இங்குள்ள சிவலிங்க உருவம் சுயம்பு வடிவம் ஆகும். இவ்வடிவில் உடும்பு வடிவம் காணப் படுகிறது.

இத்தலத்தில் திருமாலீஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் ஒரு சிவாலயமும் உண்டு. இங்குள்ள கல் வெட்டுகளின் மூலம், இறைவர் ஆளுடையார், அகத்தீச்சரம் உடையார், மாகறல் உடைய நாயனுர் என்று குறிக்கப் பட்டுள்ளனர். மாகறல் பட்டியர் போயன் காமன் வரதன் என்பவன் புதியனவாகத் திருவீதிகளையும் திருமட விளாகத்தையும் அமைத் தனன்,

இத் தலத்தில் திருமேற்கோயில் என்னும் பெருமாள் கோயில் உளது. இஃது இதுபோது வைகுந்தப்பெருமாள் கோவில் என்று கூறப்படுகிறது. தாயார் சந்நிதியும் உண்டு. இத் தலத்துக் கல் வெட்டால் இங்குள்ள முருகன் கோவிலை அண்டம் பாக்கம் கிழான்காழன் என்பவன் கட்டினன் என்பது தெரிகிறது.

இத் தலத்துக்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இப் பதிகம் ஆறு சீர்களேக்